Header Ads



ஹக்கீமிற்கு SLFP, JVP எதிர்ப்பு - ஏப்ரல் 21 தாக்குதலை ISIS நடத்தவில்லையா..?


ஏப்ரல் 21 தாக்குதலை ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்தவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவுஃப் ஹக்கீம் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஹக்கீம் இந்த கருத்தை வெளியிட்டிருந்தார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதன் பின்னர், ஐ.எஸ். தீவிரவாதிகளை சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த தாக்குதலைக்கு பொறுப்பேற்குமாறு கோரியப்பின்னரே அவர்கள் இதனை பொறுப்பேற்றதாக அமைச்சர் கூறினார்.

இதற்கு ஜேவிபி உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தி வருகின்ற, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் உறுப்பினராகவும் ஹக்கீம் உள்ளார்.

அவர் இவ்வாறான கருத்தை வெளியிடுகின்றமை, இந்த விசாரணைகளை பாதிக்கும் என்று, ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினரும், விசாரணைத் தெரிவுக்குழுவின் உறுப்பினருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இவ்வாறான கருத்தை வெளியிட்டு தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கப்படுகிறதோ? என்ற ஐயம் எழுந்திருப்பதாக சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. CID should investigate his irresponsible statements. Questions for Mr. Hakeem. Why did Zahran target innocent Christians? Targeting a particular race shows that this was a contract from someone like ISIS. Why did Zahran team go in processions with the ISIS flag. Do you still trust Indian media?

    ReplyDelete

Powered by Blogger.