Header Ads



கோத்தபாயவின் பெயரை கூறும்போது, ஒருவித அச்சம் ஏற்படுகிறது - குமார வெல்கம

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பெயரை கூறும் போது தனக்கு ஒரு வித அச்சம் ஏற்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் அவர் மேலும் கூறுகையில்,

பனியன் மற்றும் வேட்டியை அணியும் தலைவரே எமது அணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார்.

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி அறிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும் அது சம்பந்தமாக அணியின் சிரேஷ்ட உறுப்பினரான என்னுடன் கலந்துரையாடவில்லை.

1952ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்க குதிரையில் இருந்து விழுந்து உயிரிழந்த பின்னர், அன்றைய ஆளுநர், அடுத்த சிரேஷ்ட தலைவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை பிரதமராக நியமிக்காது, கனிஷ்ட தலைவரான டட்லி சேனாநாயக்கவை பிரதமராக நியமித்தார்.

இதன் காரணமாக பண்டாரநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கு சென்றார். மூத்த தலைவரை மதிக்காததே இதற்கு காரணமாக அமைந்தது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.