Header Ads



என்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக கூறுகின்றனர், முடிந்தால் எங்கிருக்கின்றது என சொல்லவும்

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயாராக இருந்த போதும், கலவரத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்ததால் நாட்டின் நலன் கருதி பதவியை இராஜினாமா செய்யும் முடிவை எடுத்ததாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பி.பி.சியின் சிங்கள செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நான் எவ்வித குற்றச்சாட்டுகளிலும் ஈடுபடவில்லை. எனக்கு எதிராக இன்னும் முறைப்பாடுகள் முன்வைக்கப்படவில்லை. ஏன்! நீதிமன்றத்தில் கூட ஒரு வழக்கேனும் இல்லை.

கூட்டு எதிரணிக்கும் இது நன்கு தெரியும். எனவே தான், எனக்கு எதிராக ஏனோதானோவென்று நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தனர்.

திகதியை கூட சரிவர குறிப்பிடவில்லை. பதவி விலகாமல் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகங்கொடுக்க தயாராகவே இருந்தேன்.

இந்த நிலையில் என்னையும், ஆளுநர்களையும் பதவி விலகுமாறு கோரி தேரர் ஒருவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதை மையப்படுத்தி கறுப்பு ஜுலை கலவரம் போல் மீண்டும் ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்தனர்.

எனவே தான், நாட்டின் நலன் கருதி இராஜினாமா செய்யும் முடிவு எடுக்கப்பட்டது. சமூகத்தின் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாலேயே கூட்டாக பதவி துறக்கும் முடிவை எடுத்தோம்.

என்னிடம் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாக கூறுகின்றனர். முடிந்தால் எங்கிருக்கின்றது என சொல்லவும் என பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

அத்துடன், இப்ராஹீம் என்பவர் கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவராக செயற்பட்டவர். அந்த வகையில் தான் என்னை 2017ஆம் ஆண்டு சந்தித்து படம் எடுத்து கொண்டார் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Also Mr. Ibrahim was not a Terror. No Issues With Mr. Ibrahim
    His Son was terror / Victim.

    ReplyDelete

Powered by Blogger.