June 24, 2019

முஸ்லிம் தலைமைகள், நாடகத்தை ஆடுகிறார்கள் - வியாழேந்திரன்

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் கூறியவாறு கல்முனைத் தமிழருக்காக நாடாளுமன்ற பதவியை தூக்கியெறியும் நிலை வந்தால் நானும் அதில் இணைந்துகொள்வேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

பதவியை இராஜினாமாச் செய்யத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.  கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும் வைபவத்தில் நேற்று கலந்து கொண்ட போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக நாமும் மட்டக்களப்பில் போராட்டத்தைச் செய்தோம். ஜனாதிபதி பிரதமர் முதல் அமைச்சர் வரை கடந்த காலங்களில் இப்பிரச்சினையை இழுத்தடித்து வந்துள்ளனர். அதற்கு த.தே.கூட்டமைப்பினரும் ஒத்துழைத்து கவனமெடுக்காது ஏனையோருடன் உறவு பாராட்டிவந்துள்ளனர்.

88வீத தமிழர்கள் வாழ்கின்ற வன்னிமாவட்டத்தில் ஒரு முஸ்லிம் அரசஅதிபரை நியமிக்கும்வரை பார்த்துக்கொண்டிருந்தவர்கள்தான் இந்த த.தே.கூட்டமைப்பினர். சம்பந்தர் இதனை தட்டிக்கேட்டதில்லை. இன்று எமது பிரதிநிதித்துவம் தேவைப்படுவதனால் எம்மிடம் அரசாங்கம் தாங்கிநிற்கிறது எனவே அதனைப் பயன்படுத்தவேண்டும்.

நாளை இந்தசந்தர்ப்பம் வரும் என்று சொல்ல முடியாது. ஆட்சியைத் தீர்மானிக்கின்ற சக்தியாக அவர்கள் மாறுவதற்கான ஏற்பாடுகளை முஸ்தீபுகளை அவர்கள் மேற்கொண்டுவருகிறார்கள். எனவே கிடைத்திருக்கின்ற இறுதி சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை செய்யவேண்டும்.

சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி அவர்களது மக்களுக்கு உச்சக்கட்ட பயன்களைப் பெற்றெடுப்பதில் முஸ்லிம் தலைவர்கள் வல்லவர்கள். ஆனால் செய்யக்கூடிய திராணியிருந்தும் வாழாவிருப்பது எமது தமிழ்த்தலைமைகள். கிழக்கின் தலைநகர் கல்முனை. அது எமது தாயகம் என்று சொல்லுவதற்கே இந்த முஸ்லிம் தலைமைகள் இந்த நாடகத்தை ஆடுகிறார்கள்.

நல்லிணக்கம் என்ற போர்வையில் கிழக்கில் சகலவற்றையும் ஆக்கிரமித்துவிட்டார்கள் அவர்கள். இதனை சம்பந்தரும் கூட்டமைப்பும் புரிந்துகொள்ள வேண்டும். அங்கஜன் கூறியவாறு கல்முனைத் தமிழருக்காக நாடாளுமன்ற பதவியை தூக்கியெறியும் நிலை வந்தால் நானும் அதில் இணைந்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.

4 கருத்துரைகள்:

நீங்கள் ஆயுதங்களுடன் 30 வருடங்களாக ஆடிய கேவலமான மனித வேட்டையை விட அவர்கள் ஆடும் நாடகம் எவ்வளவோ மேலானது.

ஏம்பா வியாழேந்திரன், நீங்க தமிழர்களைக் காட்டிக் கொடுப்பதற்காக மஹிந்த சேர் கிட்ட எத்தனை கோடி ரூபா வாங்கினீங்க. மறந்துட்டேன். பேப்பரில் எல்லாம் போட்டாங்களே. கொஞ்சம் வெளக்க முடியுமா. என்ன பதவியை ராஜினாமா செய்யவா. இன்னும் எலக்ஷனுக்கு கொஞ்ச நாள்த்தான் இருக்கு. இந்த ஸ்டண்ட் எல்லாம் இப்ப வேணாம்.

Fist of all let Tamil public knows how many million you got from MR.& Co.
Don't try to pretend you are a good person in front of Eastern Tamils

ஒரு பயங்கரவாதியிடமிருந்து இனவாதத்தை தவிர வேறு எதை எதிர்பாக்க முடியும்.நாய்ட வேலை குரைப்பதுதான் அது சிரிச்சாத்தான் நாம் கவலைப்பட வேண்டும்.....

Post a comment