June 27, 2019

ஜாஎல பள்ளிவாசலை, விற்பனைசெய்ய திட்டம்...? தொழுவதற்கு யாருமில்லை

- AAM. Anzir -

ஜாஎல - ஏக்கல கம்பஹா வீதியில் அமைந்துள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசலை விற்பனை செய்வது பற்றி ஆராயப்பட்டு வருவதாக, பள்ளிவாசலுடன் தொடர்புடைய வட்டாரங்கள் jaffna muslim இணையத்திடம் தெரிவித்தன.

கடந்தசில மாதங்களாக, இப்பள்ளிவாசல் மூடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் ஊழியர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பிரதான வீதிகளில் பயணிக்கும் முஸ்லிம்களின் நலன்கருதி இப்பள்ளிவாசல் அமைக்கப்பட்டது.

பள்ளிவாசலுடன் சிறிய காணியும் காணப்படுகிறது. இமாம் தங்குவதற்கான வசதிகளும் காணப்படுகிறது.

எனினும் நாட்டில் அண்மையில் நிலவிய பதற்றமான நிலை மற்றும் பிரதேச வாசிகள் குறித்த பள்ளிவாசலை மூடுமாறு விடுத்த அழுத்தம், தொடர்ந்து பள்ளிவாசலில் தொழுவதற்கு மக்கள் முன்வராமை போன்ற காரணங்களினால் பள்ளிவாசலை விற்றுவிடுவது பற்றி ஆராயப்பட்டு வருவதாகவும் பள்ளிவாசலுடன் தொடர்புடைய முக்கிய அந்த நபர் jaffna muslim இணையத்திடம்  தெரிவித்தார்.

தொழுவதற்காக ஆரம்பிக்கப்பட்டு, தொழுவதற்கு மக்கள் இல்லாமையால், இலங்கையில் மூடப்படுகின்ற முதலாவது பள்ளிவாசலாக, இப்பள்ளிவாசல் இருக்கலாமென்ற கவலைமிகு தகவலையும் இங்கு இணையம் jaffna muslim பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.

6 கருத்துரைகள்:

ஆளுக்கொரு பள்ளி கட்டினால் தொழுவதற்கு யார் வருவார். எனது கிராமம் சுமார் 640 தனி முஸ்லீம் குடும்பங்களைக் கொண்ட பிரதேசம் பள்ளிவாசல்கள் 5 அதான் ஒன்றையும் ஒழுங்காகக்கேட்டு பதில் கூற முடியாது ஒரு பள்ளியின் பயான்கள் கூட ஒன்றை ஒன்று முட்டிமோதிக்கொள்ளும். இது சத்தியம். ஒருவரின் ஒலிபெருக்கியின் சத்தத்தை விட மற்றயவரின் ஒலிபெருக்கி சத்தத்தை போட்டிக்கு அதிகரித்து வைத்திருக்கின்றனர். எதிர் காலத்தில் பள்ளிவாசலைச் சுற்றியள்ளவர்களுக்கு காது கேட்கும் பிரச்சினைகள் ஏற்படலாம், குழந்தைகள், நோயாளிகள் தூங்க முடியாது. பொலிஸில் முறைப்பாடு செய்ய மனம் சொல்லும். பரம்பரைக்கும் பழிச்சொல் வந்துவிடும் என்ற பயத்தில் அதனைச் செய்யவில்லை.

The survival of this mosque is very very important in Jaela-Ekala area as there is no mosque available except this in close proximity for the Muslim employees working in factories.

So the mosque must not be sold or closed down. It should welcome people into it.

The survival of this mosque is very very important in Jaela-Ekala area as there is no mosque available except this in close proximity for the Muslim employees working in factories.

So the mosque must not be sold or closed down. It should welcome people into it.

சவூதியிலும் அதிக பள்ளிவாயல்கள் மிக அருகில் ( 300 மீற்றல், தொலைவில் உள்ளது ஈமான் பலகீனமான இந்த காலத்தில் பள்ளிவாசல் அருகில் இருப்பது நல்லதே அத்தோடு குர் ஆணை கற்று கொடுக்க இது இலகுவான வழியாகும் இயக்க வெறி கொள்ளாமல் ஒற்றுமையாக சென்றால் இது எமது சமூகத்தின் வெற்றி தவிர வேரில்லை


அப்படி இந்த பள்ளி வாயலை அவசர அவசரமாக விற்பதர்க்கு இவர்களுக்கு என்ன தேவை உள்ளது நம்முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை பராமரிக்க முடிய வில்லை எண்பதர்க்காக அதை விற்பதுதான் முடிவா
அதை விட்டுவிடுங்கள் நம் எதிர்கால சமுதாய மாவது அதன்மூலம் பயன் பெறலாம்

Post a comment