Header Ads



ரிஷாட்டுக்கு எதிராக, சம்பிக்க களத்தில் - பொறுமை காக்குமாறு ரணில் கோரிக்கை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரான அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்குமிடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது என கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.

“அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பாரதூரமானவை. எனவே, நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக நீதியை எதிர்பார்க்கமுடியாது. இவ்விவகாரத்தை சி.ஐ.டியினரும், ரி.ஐ.டியினரும்தான் கையாளவேண்டும்.

அத்துடன், சுயாதீன விசாரணைகளுக்கு இடமளிக்கும் வகையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பதவி துறக்குமாறு பணிப்புரை விடுங்கள்.’’ என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க, பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், “தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் போலியானவை என்று அமைச்சர் ரிஷாட் குறிப்பிட்டார்.

ஆகவே, தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவரும்வரை சற்று பொறுமைகாப்போம்.” என்று குறிப்பிட்டுள்ளார் எனவும் கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிந்து அறியமுடிந்தது.

No comments

Powered by Blogger.