Header Ads



மகிந்தவின் காலத்தில்கூட, முஸ்லிம்க‌ளுக்கெதிராக இப்படி நடக்கவில்லை

ஐக்கிய‌ தேசிய‌ க‌ட்சியின் அமைச்ச‌ரின் கீழுள்ள‌ பொது நிர்வாக‌ அனர்த்த‌ அமைச்சினால் வெளியிட‌ப்ப‌ட்ட‌ சுற்று நிரூப‌த்தில் முஸ்லிம் பெண் உத்தியோக‌த்த‌ர்க‌ள் அபாயா அணிவ‌தை முற்றாக‌ த‌டை செய்திருப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து.

மேற்ப‌டி சுற்று நிரூப‌ம் திருத்த‌ப்ப‌ட்டு முக‌ம் மூடாத‌ வ‌கையில் ச‌ம‌ய‌ அடையாள‌ ஆடை அணிய‌ அனும‌திக்க‌ வேண்டும் என‌வும் அர‌சாங்க‌த்தை கேட்டுக்கொண்டுள்ள‌து.

இது ப‌ற்றி அக்க‌ட்சி மேலும் தெரிவித்துள்ள‌தாவ‌து,

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ச ஆட்சிக்கால‌த்தில் கூட‌ இட‌ம்பெறாத‌ அள‌வு இந்த‌ அர‌சாங்க‌ம் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ ச‌தித்திட்ட‌ங்க‌ளை நிறைவேற்றி வ‌ருவ‌த‌ன் அங்க‌மாக‌வே முஸ்லிம் அர‌ச‌ உத்தியோக‌ பெண்க‌ளின் இதுவ‌ரையான‌ உரிமையை இந்த‌ அர‌சு ப‌றித்துள்ள‌து.

அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ( 4 ) பிரிவில் ஏதேனும் சமய மரபுகளுக்கு இணங்க தமது ஆடைகளை அமைத்துக்கொண்டுள்ள யாரும் இருப்பின் அவர்கள் ( 1) ஒன்றில் உள்ளவாரான உடையை அணிந்து அதன் பின் அந்த சமய அடையாளத்தை உறுதிப்படுத்தும் விதத்திலும் உத்தியேகத்தார்களால் முழு முகத்தை தெளிவாக அடையாளம் காணக்கூடிய விதத்திலும் மேலதிக ஆடை அணிகலன் ஒன்றை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இத‌ன் மூல‌ம் அபாயா ட்ய‌விர்க்க‌ப்ப‌ட்டு சாரி அணிந்து த‌லையை மூடிக்கொள்ள‌ வேண்டும் என‌ குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌மை வேத‌னையான‌ விட‌ய‌ம். அத்துட‌ன் இந்த‌ அறிவிப்பின் மூல‌ம் த‌மிழ் பெண்க‌ள் ச‌ல்வார் அணிய‌வும் த‌டைவிதித்த‌த‌ன் மூல‌ம் த‌மிழ் பெண்க‌ளின் உரிமையும் ம‌றுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தேசிய‌ பாதுகாப்புக்கும் முஸ்லிம் பெண்க‌ளின் ஆடைக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை. குண்டுத்தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் அபாயா அணிந்து வ‌ர‌வும் இல்லை. ப‌ய‌ங்க‌ர‌வாத‌த்தில் ஈடு ப‌டுவோர் சாரி அணிந்தும் வ‌ருவ‌ர் என்ப‌தை க‌ட‌ந்த‌ யுத்த‌ கால‌த்திலும் க‌ண்டுள்ளோம்.

அத்துட‌ன் ஆடைபற்றிய புதிய சுற்று நிரூபம் அரசியல் அமைப்பின் 14 (1) (ஊ)க்கு முரணானதாகும்.

ஆக‌வே பொது நிர்வாக‌ அண‌ர்த்த‌ அமைச்சு உட‌ன‌டியாக‌ த‌ன‌து சுற்ற‌றிக்கையை திருத்த‌ம் செய்து முஸ்லிம் அலுவ‌ல‌ர்க‌ளின் ஆடைத்தேர்வுரிமைக்கு இட‌ம‌ளிக்க‌ வேண்டும். இத‌ற்காக‌ அர‌சில் அங்க‌ம் வ‌கிக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ள் அவ‌ச‌ர‌ ந‌ட‌வ‌டிக்கை எடுக்க‌ வேண்டும் என‌ உல‌மா க‌ட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

2 comments:

  1. ஆட்சிகளை ஒப்பீடுசெய்து கருத்துரைக்காமல் உங்கள் வாதங்ளை முன்வையுங்கள் உலமா அவர்ளே,சந்தர்ப்பங்கள்வேறுவேறானவை.இருந்தும் எல்லாரும் ஒருகுட்டையில் ஊறியவர்ளே.

    ReplyDelete
  2. Why dont you understand the facts? these all are from the seeds "He" sowed??

    ReplyDelete

Powered by Blogger.