Header Ads

ராஜிதவின் பச்சைப் பொய், முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் தொடர்பில் இருந்ததாகவும், தேசிய பாதுகாப்பு பிரிவிடமிருந்து சம்பளம் பெற்று வந்ததாகவும், பின்னர் பயங்கரவாத அமைப்பை உருவாக்கியதாகவும் கடந்த 30.04.2019 அன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார். இதற்கு ஆதாரமாக அப்துர் ராசிக் உள்ளிட்ட சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் SLTJ உறுப்பினர்கள் சிலர் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோருக்கு அல்குர்ஆன் சிங்கள பிரதியை வழங்கும் புகைப்படங்களை ஊடகங்களுக்கு காண்பித்தார்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்திற்கோ (CTJ), அப்துர் ராசிக் அவர்களுக்கோ முன்னால் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுடன் எவ்வித தொடர்பும் இதற்கு முன்போ இப்போதோ இருந்ததில்லை. அத்துடன் கோத்தபாய ராஜபக்ஷ அவர்களை நேரடியாகவோ தொலை பேசி வாயிலாகவோ வேறு எந்த முறையிலோ ஒரு போதும் சந்தித்ததோ, சம்பந்தப்பட்டதோ இல்லையென்பதை மிகவும் பொறுப்புடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ) இன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (02.04.2019) கொழும்பில் உள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டார்கள்.

அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கும் ராஜித சேனாரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து நின்று பச்சை பொய்யை பேசுவதை எந்தவொரு பொது மகனும் ரசிக்க மாட்டான் என்பதுடன் இவர் எவ்வளவு பெரிய பச்சைப் பொய்யர் என்பதையும் பொது மக்கள் அறிந்து கொள்வார்கள்.

முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அல்லது உதய கம்மன்பில MP அவர்களுக்கு குர்ஆன் வழங்கிய நேரத்தில் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்த காரணத்தினால் அவர்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்வதற்காக ராஜித சேனாரத்ன குறிப்பிடுகிறார்.

ஒருவருடன் புகைப்படம் எடுத்ததே அவரிடமிருந்து பணம் பெறுகிறோம் என்பதற்கு ஆதாரம் என்றால் ராஜித சேனாரத்னவுடனும் அப்துர் ராசிக் உள்ளிட்டவர்கள் சந்திப்பு நடத்தி குர்ஆன் சிங்கள பிரதியை அன்பளிப்பு செய்திருக்கிறோம். அதன் புகைப்படத்தை இன்றும் எமது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் காண முடியும். அப்படியானால் இப்போது எமது அமைப்புக்கும் அப்துர் ராசிக் அவர்களுக்கும் தற்போதைய UNP அரசாங்கமும், அமைச்சர் ராஜிதவும் பணம் தருகிறார்கள் என்று அர்த்தமா?

அமைச்சர் ராஜிதவுடனும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சந்தித்து சிங்கள குர்ஆன் அன்பளிப்பு செய்து புகைப்படம் எடுத்துள்ளதை மறந்த நிலையிலேயே ராஜித சேனாரத்த தனது பச்சை பொய்யான கருத்தை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பொறுப்பற்ற பச்சை பொய்யான பேச்சு தொடர்பாக அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்டத்தரணிகளுடன் ஜமாஅத் சார்பில் கலந்துரையாடி வருகிறோம். என்பதையும் இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

முகத்திரை தடை வரவேற்கத்தக்கது – காதுகளை பெண்கள் திறக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.

பெண்கள் முகத்தை மறைத்து அணியும் முகத்திரைக்கு தற்போது அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான திருக்குர்ஆன் மற்றும் நபிகள் நாயகம் அவர்களின் வழிகாட்டல் அடிப்படையிலேயே பெண்கள் முகத்தை மறைத்தல் என்பது தடுக்கப்பட்ட ஒன்றாகும்.

முகம் மறைத்தல் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியருக்கு மாத்திரமுள்ள சட்டமாகும். அதனை வேறு எந்த பெண்களும் நடைமுறைப்படுத்தக் கூடாது. திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் இதனைத்தான் தெளிவாக நமக்கு கற்றுத் தருகின்றன.

ஆகவே முகம் மறைத்தல் தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளும் அதே நேரம், முகம் மறைத்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் பெண்கள் காதுகளையும் திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது பெண்களுக்கான இஸ்லாமிய அடிப்படை வழிகாட்டல்களுக்கு எதிரான ஒன்றாகும். இது தொடர்பாக அரச உயர் மட்டங்களுக்கு தெளிவு படுத்த முயல்வதுடன், முஸ்லிம் பெண்கள் காதுகளை திறக்க வேண்டும் என்ற அறிவிப்பு தொடர்பில் சட்ட ரீதியிலான அடுத்த கட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்க ஜமாஅத் சட்டத்தரணிகளுடன் ஆலோசனை செய்து வருகிறது.

NTJ என்கிற தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. CTJ, SLTJ, ACTJ, UTJ மற்றும் உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகள் எதுவும் தடை செய்யப்பட வில்லை.

பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய ஸஹ்ரான் ஹாஷிம் என்பவர் உருவாக்கிய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் – NTJ என்ற அமைப்பும் JMI என்ற ஜமாஅத்தே மில்லதே இப்றாஹீம் என்ற அமைப்பும் மாத்திரமே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இது தவிரவுள்ள சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் (CTJ), ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ), அகில இலங்கை தவ்ஹீத் ஜமாஅத் (ACTJ), ஐக்கிய தவ்ஹீத் ஜமாஅத் (UTJ) என்ற எந்த தவ்ஹீத் அமைப்புகளோ, உள்ளுர் தவ்ஹீத் அமைப்புகளோ இலங்கையில் தடை செய்யப்பட வில்லை. இந்த எந்த அமைப்புகளும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்ட அமைப்புகள் என்று அடையாளப்படுத்தப்படவும் இல்லை.

பயங்கரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பில் தகவல் வெளியிடும் ஊடகங்கள் NTJ என்று அல்லது நெஷனல் தவ்ஹீத் ஜமாஅத் எற்று முழுப்பெயரை தெளிவாக பயன்படுத்துமாறு ஊடகங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

பயங்கரவாத செயல்பாட்டுடன் தொடர்புடைய குறித்த NTJ என்ற அமைப்புடன் இலங்கையிலுள்ள எந்தவொரு தவ்ஹீத் அமைப்புகளும் தொடர்புடன் இருக்க வில்லை என்பதுடன் குறித்த அமைப்புடன் மார்க்க ரீதியாகவே கருத்து வேறுபாடு காணப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.

-ஊடகப் பிரிவு,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

16 comments:

  1. அப்ப நீங்க சுத்தம்.ஒரு தமிழ் ஊடகம் உங்கள் முகத்திரையை கிழித்திருப்பதை இன்னும் பார்க்கவில்லையா? ஆதாரங்களுடன்.எல்லா ஆட்டங்களும் கொஞ்ஞ காலங்களுக்குத்தான்.பணம்,பதவிக்காக Islam த்தையும் மக்களையும் ஏமாத்துவதை நிறுத்துங்கள்

    ReplyDelete
  2. first inda thawheed jamathe thaday seyyanam

    ReplyDelete
  3. நல்ல காலம் ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள்தான் இல்லாவிடில் இன்னும் 20 இயக்கங்கள் தோன்றியிருக்கும்

    ReplyDelete
  4. நான் எந்தவொரு தெளஹீத் இயக்கத்தையும் சேர்ந்தவன் அல்ல.
    ஆனால் தெளஹீத் இயக்கங்களை தடை செய்ய வேண்டும் என்று கூறுபவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவர்கள் சார்ந்த இயக்க வெறியர்களே.......

    ReplyDelete
  5. உங்களுக்கு மட்டும் இரக்கமே காட்டகூடாது உஙகளுக்கு வாசியென்றால் சமூகத்தை கூட்டிக்கொடுக்கவும் தயங்காதவர்கள் நீங்கள். முகத்திரை அணிவது அணியாமலிருப்பப்பது பற்றி முஸ்லிம்களுக்குள் தான் பேசி தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து உங்களுக்கு அது பித்ஹத்தாக விளங்க அதை காபீர்கள் தடைசெய்யும்பொழுது இதைவைத்து உங்கள் நாய் புத்தியை காட்டாதீர்கள். அப்படி பார்த்தல் குழப்பம் விளைவிப்பவர்களை இஸ்லாம் எச்சரிக்கை செய்கின்றது ஊரெல்லாம் குழப்பம் விளைவித்து வயிறு வளர்க்கும் உங்களை தடை செய்வதை நாமும் ஆதரிக்கலாமா? இன்று பேரினவாதிகளும் தமிழ் அடிப்படைவாதிகளும் உங்களை ஒழித்துக்கட்டதான் முழு மூச்சாக வேலை செய்கிறார்கள் மறக்க வேண்டாம்

    ReplyDelete
  6. Muslims da alivuku ivanol pothum... Wera yaarum theywalla.

    ReplyDelete
  7. You are an utter waste fellow who has put the whole Muslim community into biggest trouble for money. We're no more fools to believe Alibaba and the thieves. You'd better to beg rather than working for money putting our community into trouble. Sltj, ctj, NTJ and how many TJs will be there in future to cheat and put us into trouble.?

    ReplyDelete
  8. வஹி இப்ப இவங்களுக்கு தான் இறங்குது....இருக்குர பிரச்சினை ல இவனுகள் வேற....

    ReplyDelete
  9. தவ்ஹீத் ஜமாஅத் என்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்
    இருந்து முற்றாக துடைத்தெறியப்பட
    வேண்டும். இவ்வாறான உங்கள் அமைப்புக்கள் காளான் முளைத்தது
    போல் எம் சமூகத்தில் தோன்றியதில்
    இருந்துதான் எமக்கு பிரச்சினை தோன்ற தொாடங்கின. உங்களுடைய நடை உடை பாவனைகள் அன்னிய மத
    சகோதரர்கள் மத்தியில் முஸ்லீமாகளைப்பற்றிய சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்க வழிசமைத்தது என்று கூட சொல்லலாம்.இஸ்லாம் கூறுகின்ற மனித நேயம் மனிதாபிமானம்,ஒழுக்க
    விழுமியங்களோடு எமது வாழ்வு பின்னப்பட்டு மாற்றுமத சகோதர்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோற்றம் பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்கறியே.அதுமட்டுமல்ல எமது இஸ்லாமிய சமுகத்திற்குள்ளே பிரிவினையையும்
    பிரசச்சினைகளையும் உருவாக்கி சமூக
    ஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற வேலையை கூட நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள். உங்கள் வருகைகள், எமது குடும்பத்துக்குள்ளே பிரச்சினை, அடுத்தவீடு அயலவர்களுக்குள் பிரச்சினை ஊருக்குள்
    பிரச்சினை, பிரதேசத்துக்குள் பிரச்சினை, நாடுதழுவியதாக முஸ்லீம்களுக்குள் குர்ஆன் ஹதீஸை
    விழங்கிக் கொண்ட தன்மையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினை,
    இவைகள் போதாது என்று மதத்தின்
    பெயரால் மற்ற சமயங்களின் சகோதரர்
    களுக்கு பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று நாம் குற்ற
    வாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளோம். இது தேவைதானா.? மார்க்கம் போதிக்க
    வந்த நீங்கள் அந்த மார்க்கத்தையே
    மற்றவர்கள் மத்தியில் பிழையாக்கி
    இன்று எமது சமூகத்தையும் சீரளிக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பத்திரிகை
    மகாநாடு நடாத்தி தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பதாக பறைசாட்ட உங்களுக்கு
    வெட்கமில்லையா?முஸ்லீம்கள் எல்லோரும் ஓர் இறை வணக்க வழிபாடு கொண்ட தவ்ஹீத்வாதிகள்தான் அதற்கேன் பிரத்தியோக பெயர்களும் இயக்கங்களும் தலைமைகளும் அதற்கு கொள்கை கோட்பாடுகளும்?
    இஸ்லாம் பரந்து விரிந்த கடல்போன்ற
    மார்க்கம் அதில் உங்களைப்போன்றவர்கள் ஒருதுளியை பரிகி விட்டு அதன் அறிவு
    ஞானத்தை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.இஸ்
    லாமும் அதன் ஒர்இறை கொள்கையும்
    இலகுவாக எல்லாவகையினராலும்
    விளங்கக்கூடிய ஒருமார்க்கம். அவரவர்
    ஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப தக்வாவோடு இஸ்லாத்தை ஒருவன்
    அணுகினால் அவனுக்கு அது நேர்
    வழிகாட்டும்.இதற்கு கூட்டம்போட்டு
    நோட்டீஸ் அடித்து இயக்கம் நடத்த தேவையில்லை. எமது நாட்டை பொறுத்தவரை எம்மத்தியில் மார்க்க
    ரீதியான ஒற்றுமை அவசியம். ஆகவே
    ஜம்மியத்துல்உலமா மற்றும் அந்தந்த
    ஊர்களில் உள்ள பள்ளிவாசல்கள்
    சம்மேளனம் ஆகிய வற்றின் நிர்வாக,
    கண்காணிப்பு கட்டுப்பாட்டின் கீழ்தான்
    எமது பள்ளிவாசல்களும் ஏனய சமய
    கலாபீடங்களும்,அமைப்புக்களும்
    இனி மேல் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை
    நாம் இனியும் உணர வில்லையென்றால் எமது இஸ்லாமிய
    வாழ்கை நெறி முறை இந்த நாட்டிலே கேள்விக்குறிதான் என்பதில் எவ்வித
    சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  10. pls sahoderarhale iwengala srilankawule irundu adichu anuppuga pls.appe than naaga nimmadiya irukkalam

    ReplyDelete
  11. தவ்ஹீத் ஜமாஅத் என்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்

  12. அ.இ.ஜ.உமாவின் கையாலாகாத்தனம், காலத்திற்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாமல் போனதின் விளைவு தான் பல இயக்கங்கள் தோன்ற அடிப்படையாகக் கொள்ளலாம். முகம் மூடுவது தொடர்பான உங்கள் கருத்துடன் உடன்பாடு கொண்டவர்கள் சமூகத்தில் பாதிக்கு மேல் உள்ளனர். அ.இ.ஜ.உலமா அனைத்து விடயங்களிலும் அவர்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டு செல்லும் மன வலிமையற்று காணப்படுகிறது. சரியோ பிழையோ தலைமைத்துவம் ஒன்றுடன் சேர்ந்து செல்லுவது எமது கடமை காலப்போக்கில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்....

    ReplyDelete
  13. தௌஹீத் அமைப்புகள் ஒவ்வொன்றிக்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருக்கத்தான் வேண்டும். எனவே சகல தௌஹீத் அமைப்புகளையும் காலத்தின் தேவை கருதி நாட்டு மக்களின் சௌஐன்னிய வாழ்வு கருதி தற்காலிகமாகவேனும் தடைசெய்துதான் ஆக வேண்டும்.

    ReplyDelete
  14. தவ்ஹீத் ஜமாஅத் என்ற சொல் கொண்ட எந்த அமைப்பும் எம்மத்தியில்
    இருந்து முற்றாக துடைத்தெறியப்பட
    வேண்டும். இவ்வாறான உங்கள் அமைப்புக்கள் காளான் முளைத்தது
    போல் எம் சமூகத்தில் தோன்றியதில்
    இருந்துதான் எமக்கு பிரச்சினை தோன்ற தொாடங்கின. உங்களுடைய நடை உடை பாவனைகள் அன்னிய மத
    சகோதரர்கள் மத்தியில் முஸ்லீமாகளைப்பற்றிய சந்தேகத்தையும் அச்சத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்க வழிசமைத்தது என்று கூட சொல்லலாம்.இஸ்லாம் கூறுகின்ற மனித நேயம் மனிதாபிமானம்,ஒழுக்க
    விழுமியங்களோடு எமது வாழ்வு பின்னப்பட்டு மாற்றுமத சகோதர்களுக்கு ஒரு முன்மாதிரியாக தோற்றம் பெற்றுள்ளதா என்பதும் கேள்விக்கறியே.அதுமட்டுமல்ல எமது இஸ்லாமிய சமுகத்திற்குள்ளே பிரிவினையையும்
    பிரசச்சினைகளையும் உருவாக்கி சமூக
    ஒற்றுமைக்கு வேட்டுவைக்கின்ற வேலையை கூட நீங்கள் செய்து கொண்டு வருகின்றீர்கள். உங்கள் வருகைகள், எமது குடும்பத்துக்குள்ளே பிரச்சினை, அடுத்தவீடு அயலவர்களுக்குள் பிரச்சினை ஊருக்குள்
    பிரச்சினை, பிரதேசத்துக்குள் பிரச்சினை, நாடுதழுவியதாக முஸ்லீம்களுக்குள் குர்ஆன் ஹதீஸை
    விழங்கிக் கொண்ட தன்மையில் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பிரச்சினை,
    இவைகள் போதாது என்று மதத்தின்
    பெயரால் மற்ற சமயங்களின் சகோதரர்
    களுக்கு பாரிய பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டு இன்று நாம் குற்ற
    வாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளோம். இது தேவைதானா.? மார்க்கம் போதிக்க
    வந்த நீங்கள் அந்த மார்க்கத்தையே
    மற்றவர்கள் மத்தியில் பிழையாக்கி
    இன்று எமது சமூகத்தையும் சீரளிக்க முற்பட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். இன்னும் பத்திரிகை
    மகாநாடு நடாத்தி தவ்ஹீத் ஜமாஅத்தில் இத்தனை பிரிவுகள் இருப்பதாக பறைசாட்ட உங்களுக்கு
    வெட்கமில்லையா?முஸ்லீம்கள் எல்லோரும் ஓர் இறை வணக்க வழிபாடு கொண்ட தவ்ஹீத்வாதிகள்தான் அதற்கேன் பிரத்தியோக பெயர்களும் இயக்கங்களும் தலைமைகளும் அதற்கு கொள்கை கோட்பாடுகளும்?
    இஸ்லாம் பரந்து விரிந்த கடல்போன்ற
    மார்க்கம் அதில் உங்களைப்போன்றவர்கள் ஒருதுளியை பரிகி விட்டு அதன் அறிவு
    ஞானத்தை மட்டுப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றீர்கள்.இஸ்
    லாமும் அதன் ஒர்இறை கொள்கையும்
    இலகுவாக எல்லாவகையினராலும்
    விளங்கக்கூடிய ஒருமார்க்கம். அவரவர்
    ஆற்றலுக்கும் அறிவுக்கும் ஏற்ப தக்வாவோடு இஸ்லாத்தை ஒருவன்
    அணுகினால் அவனுக்கு அது நேர்
    வழிகாட்டும்.இதற்கு கூட்டம்போட்டு
    நோட்டீஸ் அடித்து இயக்கம் நடத்த தேவையில்லை. எமது நாட்டை பொறுத்தவரை எம்மத்தியில் மார்க்க
    ரீதியான ஒற்றுமை அவசியம். ஆகவே
    ஜம்மியத்துல்உலமா மற்றும் அந்தந்த
    ஊர்களில் உள்ள பள்ளிவாசல்கள்
    சம்மேளனம் ஆகிய வற்றின் நிர்வாக,
    கண்காணிப்பு கட்டுப்பாட்டின் கீழ்தான்
    எமது பள்ளிவாசல்களும் ஏனய சமய
    கலாபீடங்களும்,அமைப்புக்களும்
    இனி மேல் செயல்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாய தேவை என்பதை
    நாம் இனியும் உணர வில்லையென்றால் எமது இஸ்லாமிய
    வாழ்கை நெறி முறை இந்த நாட்டிலே கேள்விக்குறிதான் என்பதில் எவ்வித
    சந்தேகமும் இல்லை.

    ReplyDelete
  15. தயவு இவர்களின்
    பதிவுகளை வெளி
    யிடாதீர்கள்..இவர்
    கள் வெளிநாட்டகைக்
    கூலிகள்...
    தௌஹீத் என்ற பெ
    யரில் செயற்படும்
    அனைத்து பிரிவின
    ரையும் அரசாங்கம்
    தடை செய்யவில்லை
    என்றால் நாடு எதிர்
    காலத்தில் மீண்டும்
    மீண்டும் ஆபத்தை
    எதிர்நோக்கும்.

    ReplyDelete
  16. NTJ ஐமாஅத்தினரை மட்டுமல்ல அதனோடு சேர்த்து CTJ, SLTJ, ACTJ, UTJ போன்ற சகல தௌஹீத் அமைப்புகளையும் இனிமேல் எக்காலத்திலும் இலங்கையில் இயங்காதவாறு தடைசெய்ய வேண்டும். இவர்களுக்கு பணம் எவ்வாறு கிடைக்கின்றது. அதனை எவ்வாறு எல்லாம் செலவிட்டார்கள் செலவிடுகின்றார்கள் என்பவற்றை ஆதாரபூர்வமாக பத்திரங்கள் மூலம் நிரூபிக்க வைக்க வேண்டும். தலைமைப் பதவிகளில் உள்ளோர்களின் தனிப்பட்ட சொத்து விபரங்கள் வங்கி நடவடிக்கைகள் அனைத்தும் தகுதி வாய்ந்த அதிகாரிகளினால் பரிசோதிக்கப்படல் வேண்டும். மட்டுமன்றி இந்தத் தௌஹீத்காரர்கள் ஆளுக்கு ஒரு கருத்து உள்ளவர்களாக இருந்து நாட்டையும் முஸ்லிம்களையும் குழப்பி வருகின்றனர். இலங்கைவாழ் சகல முஸ்லீம்களும் இவர்களுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.