Header Ads



அலி ஹசனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட, துப்பாக்கி ரவைகளின் உண்மை நிலவரம் இதுதான்..!

நிதி அமைச்சின் ஊடக செயலாளர் மொஹமட் அலி ஹசனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் தனது தாதாவுக்கு சொந்தமானதென அலி ஹசனின் மகன் தெரிவித்துள்ளார்.

மல்வானை பிரதேச வீட்டில் இன்று -29- மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 93 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.

இதனையடுத்து நிதியமைச்சர் ஊடகச் செயலாளர் பியகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

குறித்த துப்பாக்கி ரவைகள் தொடர்பில் ஊடகச் செயலாளரின் மகன் கருத்து வெளியிட்டுள்ளார்.

“இந்த வீடு எங்கள் தாத்தாவுக்கு சொந்தமானது. அம்மாவின் அப்பாவுடையது. எங்கள் தாத்தாவிடம் போர துப்பாக்கி ஒன்று இருந்தது.

88 - 89 ஆம் ஆண்களில் எங்கள் தாத்தா அதனை பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. தாத்தா உயிரிழந்து தற்போது 17 வருடங்கள் ஆகின்றன. அம்மாவை திருமணம் செய்து சில காலங்களின் பின்னரே தந்தை இந்த வீட்டிற்கு வந்துள்ளார்.

தாத்தா அந்த துப்பாக்கிக்கான ரவைகளை கூரையின் மீது மறைத்து வைத்திருந்தார் என நாங்கள் அறிந்திருக்கவில்லை.

இது மிகவும் பழைமையான தோட்டாக்கள் என நாங்கள் பாதுகாப்பு பிரிவினரிடம் கூறினோம். எங்கள் குடும்பத்தினருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பில்லை.

இந்த தோட்டாக்கள் 35 - 40 வருடங்கள் பழைமையானதென எங்களுக்கு தெரியும். இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நாட்டிற்கு உண்மையை வெளிப்படுத்துமாறு பாதுகாப்பு பிரிவிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.