April 27, 2019

புர்கா, நிகாப் அணிந்து பாடசாலைக்குள் வரமுடியாது - ஆளுநர் உத்தரவு

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் முகத்தை முழுமையாக மூடக்கூடிய புர்கா, நிகாப் போன்றவற்றை அணிந்துகொண்டு பாடசாலை வளாகத்தினுள் வரமுடியாது என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

அதேவேளை மாணவர்களின் பெற்றோர்களும் முகத்தை முழுமையாக மூடக்கூடிய ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்குள் நுழைய முடியாது எனவும், இது தொடர்பாக தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

இந்த செய்தியை வரவேற்கிறேன்

அப்போ, திருகோணமலை தமிழ் பாடசாலை முஸ்லிம் ஆசிரியைகள்?

இவருக்கும் புர்காபோபியா எனும் உளநநோய் தொற்றிவிட்டது போலும். சண்முகா பாடசாலை ஆசிரியர்கள் வென்றெடுத்த கலாச்சார ஆடை உரிமையையும் இவர் குழிதோண்டிப் புதைத்துவிடுவார் போல் தெரிகிறது. புர்கா, நிகாப், ஹிஜாப் மூன்றுக்கும் ஆதாரம் இருக்கின்றது. அதில் பெண்கள் தான் விரும்புவதை அணிவது அவரவர் தெரிவு, விருப்பம். தனிமனித உரிமை எனலாம். பாடசாலை என்பது பொது இடம் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள, தமிழ் கத்தோலிக்க பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாத்திரம் என்று கூறியிருந்தால் வரவேற்கலாம். அது சரி அவர் அணியும் கோட்டு சூட்டுக்கு எங்கிருந்து ஆதாரம் எடுத்திருக்கின்றார்?

மிஸ்டர் ஆசாத் பொம்புவைக்க வந்தவர்கள் புர்காவுடனா வந்தார்கள் trouser and shirt உடன்தான் வந்தார்கள் காரணம் நாம் புர்காவுடன் போனால் கண்டு பிடித்து விடுவார்கள் என்று தெரியும்
ஆகையால் தற்போது trouser shirt போட்டு வருபவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுருத்தல் இல்லையா அப்படியானால் ஏன் பாதுகாப்புர்துறை அவர்களை சோதித்து கஸ்டப்படுத்து கின்றது பாடசாலைக்கு புர்கா அணிந்து மானைவகளை சோதனை செய துவிட்டு பாடசாலைக்குள் நுழைப்பதில் என்ன தவறு அவர்களை சோதனை செய்ய புர்கா அனியாத பெண்மானவிகளை வைத்து சோதனை செய்யலாமே இவ்வாறு நல்லமுறையில் யோசிக்காமல் மக்களின் அழகான வாழ்கை நெறியை நாசமாக்க முயல்கின்றீரே

இவனெல்லாம் ஒரு சமூக வழிகாட்டியா? தூ

உங்களின் இந்த பரிகாசத்திட்குறிய சிந்தனை மட்டத்தை வாசிக்கும்போது கண்டி காதர் ஹாஜியார் சொன்ன கதைகள் என் ஞாபகத்திட்கு வருகின்றது

@Ajan அது ஹிஜாப். இவன் சொல்லுவது புர்கா முழுதாக முகத்தை மறைப்பது.

தடுப்பதற்கான சட்டம் வரக்கூடிய சாத்தியம் உண்டு அதற்கு முன் எங்களை தயார் செய்வது சாலச்சிறந்தது. கிழக்கு மாகாண ஆளுநரும் இதனைக் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்தலாம். இலங்கையிலேயே முகம் மூடாதவர்களை காணமுடியாத ஊர் காத்தான்குடியே தீவிரவாதத்தின் தாயகமாகவும் மாறியுள்ளது. அடையாளங்களால் ஒன்றுமே ஆகப்போவதில்லை. இத்தீர்மானத்தால் தீவிரவாதம் ஈன்றெடுத்த குழந்தைகள் கொதித்தெழுவார்கள் அரசியலில் பின்னடைவு ஏற்படலாம்.சமூகத்துக்கு நல்லது செய்தோம் என்ற மனநிறைவோடு வீட்டில் இருக்கலாம்.

Post a Comment