Header Ads



வெளிவிவகார அமைச்சரை, மிரட்டிய ஜனாதிபதி

ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படாது போனால், வெளிவிவகார அமைச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் போது, அதனை அமுல்படுத்தும் மு்னனர் தனது அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இல்லாவிட்டால் தான் அதனை அங்கீகரிக்க போவதில்லை எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி இதனை வெளிவிவகார அமைச்சர் திலக் மரப்பனவிடம் தெரியப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அண்மையில் நாடாளுமன்றத்திற்கு சென்றிருந்த போது, தனது அலுவலகத்திற்கு வெளிவிவகார அமைச்சரை அழைத்து, இதனை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் வெளிவிகார அமைச்சின் செயலாளருக்கும் ஜனாதிபதி உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஜெனிவா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு தனது அனுமதியின்றி ஜெனிவாவுக்கான நிரந்த பிரதிநிதி கையெழுத்திட்டதையும் ஜனாதிபதி சாடியுள்ளதாக பேசப்படுகிறது.

1 comment:

  1. UNP can go to court if he grabs the foreign ministry.

    ReplyDelete

Powered by Blogger.