செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட 63 என்புத் தொகுதிகள்
செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 63 ஆக அதிகரித்துள்ளது.
54 என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மேலும் செம்மணி- சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட புதிய பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பகுதி “தடயவியல் அகழ்வாய்வுத்தளத்தின் இரண்டாவது பிரதேசமாக” நீதிமன்றால் நேற்றுமுன்தினம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
அவற்றில் அடையாளம் காணப்பட்ட என்பு எச்சங்கள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
Post a Comment