நாம் தற்போது மலை உச்சியில் நிற்கின்றோம்
மீண்டும் அமெரிக்காவுடன் பேச்ச வேண்டும். அரசியலுக்கு அப்பால் முழு ஒத்துழைப்பினை வழங்க தயார். எம்முடன் போட்டி தன்மை கொண்ட வியட்நாமுக்கு 20வீதமும், பங்களாதேஷூக்கு 35 வீதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் தற்போதும் அமெரிக்காவுடன் பேச்சு முன்னெடுக்கிறது. நாம் இந்த விவகாரத்தை அரசியலுக்கு அப்பால் நோக்குகின்றோம். இது NPP அரசாங்கமா அல்லது SJB என்பதல்ல. அனைத்து தரப்பினரும் தொடர்புபட்டுள்ளனர். ஒத்துழைப்பினை எதிர்பார்ப்பதாயின் அதனை வழங்க தயாராக இருப்பதாக நாம் இதற்குமுன் அநுரகுமாரவிடம் தெரிவித்திருந்தோம். எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திடமிருந்து எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. நாம் தற்போது மலை உச்சியில் நிற்கின்றோம். ஒருபுறம் சாய்ந்தால் விழுந்து விடுவோம். மறுபுறம் சென்றால் மீள முடியும். கிடைத்த இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொண்டு நன்மையைப் பெற்றுக் கொள்வோம் என அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
- கலாநிதி ஹர்ஷ டி சில்வா -

Post a Comment