Header Ads



நியூசிலாந்து பயங்கரவாதியின் தாக்குதலில், மரணித்தவர்களுக்கு பிரிட்டன் ராஜ குடும்பம் இரங்கல்


பிரித்தானிய மகாராணியின் அறிவுறுத்தலின்பேரில், ராஜ குடும்பத்தின் சார்பில் இளவரசர் ஹரியும் மேகனும் நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு தங்கள் இரங்கலை தெரிவித்துக் கொண்டார்கள்.

லண்டனில் அமைந்துள்ள நியூசிலாந்து தூதரக பணிகள் நடைபெறும் New Zealand Houseக்கு வருகை புரிந்த இளவரசர் ஹரியும், நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மேகனும் அங்கிருந்த கருத்துக்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்தனர்.

ஆழ்ந்த இரங்கல்கள், உங்களுக்கு ஆதரவாக நாங்களும் இருக்கிறோம் என்று அவர்கள் அந்த புத்தகத்தில் எழுதினர்.

பிரித்தானிய இளவரசரும் மனைவியும், தங்களை வரவேற்றவர்களை மூக்குடன் மூக்கு உரசி வாழ்த்தியதானாலும் சரி, அன்புடன் ஹரி, மேகன் என கையெழுத்திடும்போது 'aroha nui' என்ற பாரம்பரிய வார்த்தையை பயன்படுத்தியதானாலும் சரி, தாங்கள் நன்கு அறிந்து வைத்திருந்த நியூசிலாந்து பாரம்பரியங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள்.

நியூசிலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் நிகழ்ச்சியில் பிரித்தானிய ராஜ குடும்பத்தின் சார்பில் கலந்து கொள்ளும்படி மகாராணியார் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இளவரசர் ஹரியும் அவரது மனைவியும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

துக்கத்துக்கு அடையாளமாக கருப்பு உடை அணிந்து சென்றிருந்த தம்பதியினர், பூங்கொத்துக்களை வைத்து மரியாதை செலுத்தியபின் நியூசிலாந்து ஹை கமிஷனருடன் உரையாடினர்.

No comments

Powered by Blogger.