Header Ads



மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில், இலங்கைக்கு 130 ஆவது இடம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 130 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

156 நாடுகளை உள்ளடக்கிய இப்பட்டியல் இன்று (20) வௌியிடப்பட்டது.

நாட்டில் வாழும் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைத் தரம், ஆயுட்காலம், சமூக ஒத்துழைப்பு மற்றும் இலஞ்ச ஊழல் ஆகிய விடயங்களைக் கருத்திற்கொண்டு இப்பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

சர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் இப்பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதன்மை இடத்தை பின்லாந்து பெற்றுக்கொண்டுள்ளது. இந்நாடு இப்பட்டியலில் இரண்டாவது தடவையாக முதலிடத்தைப் பெற்றுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 5 இடங்களை நோர்டிக் நாடுகள் பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா இந்தப் பட்டியலில் பின்னடைவை சந்தித்து வருகிறது. முன்னதாக 14 ஆவது இடத்தில் இருந்த அமெரிக்கா தற்போது 19 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happiness rankings per country

1. Finland (7.769)

2. Denmark (7.600)

3. Norway (7.554)

4. Iceland (7.494)

5. Netherlands (7.488)

6. Switzerland (7.480)

7. Sweden (7.343)

8. New Zealand (7.307)

9. Canada (7.278)

10. Austria (7.246)

11. Australia (7.228)

12. Costa Rica (7.167)

13. Israel (7.139)

14. Luxembourg (7.090)

15. United Kingdom (7.054)

16. Ireland (7.021)

17. Germany (6.985)

18. Belgium (6.923)

19. United States (6.892)

20. Czech Republic (6.852)

21. United Arab Emirates (6.825)

22. Malta (6.726)

23. Mexico (6.595)

24. France (6.592)

25. Taiwan Province of China (6.446)

26. Chile (6.444)

27. Guatemala (6.436)

28. Saudi Arabia (6.375)

29. Qatar (6.374)

30. Spain (6.354)

No comments

Powered by Blogger.