Header Ads



பேஸ்புக்கில் கருத்துக்களை வெளியிட்ட, 15 பேர் நீதிமன்றத்திற்கு அழைப்பு

பொரளை காவல்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், பேஸ்புக் மூலம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட 15 பேர் நீதிமன்றிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

அதன்போது அவர்களிடம் சாட்சி பதிவு செய்யப்படும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளவர், விபத்தை ஏற்படுத்திய டிஃபென்டர் ரக வாகனத்தை செலுத்தியவர் அல்லவென குறித்த நபர்கள் தமது பேஸ்புக் கணக்குகளில் பதிவிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளவரே குறித்த டிஃபென்டர் ரக வாகனத்தை செலுத்தியவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர் நாளைய தினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் சத்திர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த, பொரளை காவற்துறையின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆனந்த சாகர சரத்சந்ர சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

பம்பலப்பிட்டி டுப்ளி புலர்ஸ் சந்தியில் பயணித்த பொரளை காவற்துறையின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியின் உந்துருளியை மோதிவிட்டு டிப்பென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்கள் தப்பிச் சென்றனர்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அலுத்கமகேவின் புதல்வர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் 6 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

No comments

Powered by Blogger.