Header Ads



ஜனாதிபதிக்கு எதிராக, முதலில் நடத்த வேண்டும் - தயாசிறிக்கு பதிலடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட வேண்டியவர்கள் பலர் இருப்பதாகவும் தமக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளும் முன்னர் இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கமகே தெரிவித்துள்ளார்.

நெலுவ - மெதகம பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில், எமக்கு முன்னர் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய பலர் உள்ளனர். தயாசிறி ஜயசேகர முதலில் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த வேண்டும்.

தயாசிறி ஜயசேகர அங்குமிங்கும் தாவிக்கொண்டிருந்த போது நாங்களே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெற செய்தோம். தயாசிறி ஜயசேகர எமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த முடியாது.

அப்படி விசாரணை நடத்த வேண்டுமாயின் முதலில் ஜனாதிபதிக்கு எதிராக முதலில் நடத்தப்பட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் அப்படி ஒழுக்காற்று விசாரணைகள் நடந்ததில்லை.

இம் முறையும் அப்படி நடக்காது. அதற்கான முன்னுதாரணம் இல்லை. தேசிய அரசாங்கம் தொடர்பான யோசனை கொண்டு வந்தால், அதற்கு ஆதரவான எனது வாக்கை வழங்குவேன்.

அமைச்சர் பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுதான். நான் இருக்கும் இடத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவன். எதிர்காலத்திலும் அப்படியே பணியாற்றுவேன் எனவும் பியசேன கமகே குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.