Header Ads



இந்தவருட விடுமுறை, நாட்களில் வீழ்ச்சி

மலர்ந்திருக்கும் 2019 ஆம் ஆங்கிலப் புத்தாண்டு வார நாள் விடுமுறை விரும்பிகளான அரசாங்க உத்தியோகத்தர்களுக்குச் சோபிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

காரணம் வாரநாள்  விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019 ஆம் ஆண்டு காணப்படுவதேயாகும்.

இந்த ஆண்டு நிகழும் 23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வார இறுதி சனி ஞாயிறு நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவு  குறைந்துள்ளது.

இவ்வருடம் சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில் வருவதுடன், வெசாக், பௌர்ணமி விடுமுறையும் சனி, ஞாயிறு தினங்களில் வருகின்றன.

இவ்வாறு வார இறுதித் தினங்களில் வரும் விஷேட தினங்கள் 15 ஆகக் காணப்படுகின்றன.‪

பௌணமி தினங்கள், தீபாவளி பண்டிகை, நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் உள்ளிட்ட சில விடுமுறைகளும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளன.

20 வர்த்தக விடுமுறைகளில் 8 விடுமுறைகள் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் அமைந்துள்ளன.

கடந்த ஆண்டில் 26 பொது விடுமுறை நாட்களில் நான்கு நாட்கள் மட்டுமே வார இறுதி நாட்களில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. If poya holiday is abolished, that will be a great contribution for the country’s development

    ReplyDelete

Powered by Blogger.