Header Ads



சிலை உடைப்பு, 2 பேர் தொடர்ந்து தலைமறைவு - தீவி­ர­வாத, அர­சியல் பின்­னணி பற்றியும் விசேட விசா­ரணை

மாவ­னெல்லை பிர­தே­சத்தில் புத்தர் சிலைகள் உடைக்­கப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கரு­தப்­படும் இரு பிர­தான சந்­தேக நபர்­களை குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் தொடர்ந்தும் தேடி வரு­கின்­றனர். இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­தாகக் கரு­தப்­படும் 7 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு எதிர்­வரும் ஜன­வரி 2 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே மேலும் இருவர் தேடப்­பட்டு வரு­கின்­றனர்.

இதே­வேளை, இந்த சம்­பவம் தொடர்­பான புல­னாய்வு  விசா­ர­ணை­களை கண்­கா­ணிப்­ப­தற்­காக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஷானி அபே­சே­கர மாவ­னெல்­லைக்கு விஜயம் செய்­துள்ளார்.

இவ­ருடன் விசேட புல­னாய்­வா­ளர்கள் அடங்­கிய குழு­வொன்றும் அப்­ப­கு­திக்கு சென்று விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இதே­வேளை, இச்­சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என நம்­பப்­படும் சக­லரும் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வ­ரென குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்குத் தெரி­வித்­துள்ளார். அத்­துடன் குறித்த சந்­தேக நபர்கள் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பதற்­றத்தை தோற்­று­விக்கும் நோக்கில் செயற்­படும் தீவி­ர­வாதக் குழு­வொன்றின் உறுப்­பி­னர்­களா என்­ப­தையும் இவர்­களின் பின்­ன­ணியில் ஏதேனும் அர­சியல் சக்­திகள் உள்­ள­னவா என்­பதைக் கண்­ட­றியும் நோக்­கிலும் விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வ­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

சந்­தேக நபர்கள் மோட்டார் சைக்­கிள்­க­ளி­லேயே புத்தர் சிலைகள் அமைந்­துள்ள பகு­தி­க­ளுக்கு சென்­றுள்­ள­தா­கவும் சுத்­தி­யல்­களைப் பயன்­ப­டுத்­தியே சிலை­களை உடைத்­துள்­ள­தா­கவும் ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரிய வந்­துள்­ளது. இவ்­வாறு சிலை­களை உடைக்கப் பயன்­ப­டுத்­திய இரண்டு சுத்­தி­யல்­களும் சந்­தேக நபர்கள் வழங்­கிய தக­வல்­க­ளுக்­கி­ணங்க கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

சகல சந்­தேக நபர்­களும் மாவ­னெல்லை பிர­தே­சத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வய­துக்­கி­டைப்­பட்­ட­வர்­க­ளாவர் என பொலிசார் தெரி­விக்­கின்­றனர். இவர்கள் மாவ­னெல்­லையின் ரந்­தி­வெல மற்றும் மஹா­கத்­தே­க­மவின் ஹிங்­குல ஆகிய இரு பிர­தே­சங்­களின் சந்­தி­க­ளி­லுள்ள சிலை­களை உடைத்­துள்­ள­தாக குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

டிசம்பர் 26 ஆம் திகதி அதி­கா­லையில் சிலை­யொன்றை உடைத்துக் கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்­தி­லேயே இளைஞர் ஒரு­வரைப் பிடித்து பிர­தே­ச­வா­சிகள் பொலி­சா­ரிடம் ஒப்­ப­டைத்­தி­ருந்­தனர். அதனைத் தொடர்ந்து குறித்த இளைஞர் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­திற்­க­மைய ஏனைய சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

இவர்­களில் இருவர் தாமாக முன்­வந்து பொலிசில் சரணடைந்தனர். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர்களுக்கும் வெலம்பொட, கடுகஸ்தோட்டை, பேராதெனிய, பொத்துஹர பிரதேசங்களில் உள்ள கோவில்கள் மற்றும் சிலைகளை உடைத்த சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா எனும் கோணத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-Vidivelli

No comments

Powered by Blogger.