Header Ads



ஷுஹதாக்கள் தினம், ஏன் அனுஷ்டிக்கிறோம்...?


காத்தான்குடியில் 28வது ஷுஹதாக்கள் தினம் இன்று 03.08.2018 வெள்ளிகிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.

1. ஷஹீதக்கப் பட்ட உறவுகளுக்காக, அவர்களது உறவுகளுக்காக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ கேட்டல்.

2. வரலாற்றில் இன்னுமொருமுறை நாம் அடக்கு முறைகளுக்கு ஆளாகக் கூடாது என்ற படிப்பினைகளை பெற்றுக் கொள்வதற்காக.

3. வேற்றுமைகளுக்கு மத்தியிலும் ஒற்றுமை பேணி எமது சமூக ஐக்கியத்தை தேசத்திற்கும் பிராந்தியத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுதல். 

4. எமது இருப்பையும் பாதுகாப்பையும் உரிமைகளையும் நாமே உறுதி செய்து பாது காத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்விற்காக.

5. ஆயுத முனையில் பறிக்கப்பட்ட எமது காணிகளை, நிலங்களை மீளவும் பெற்றுக் கொள்ளவும் இருப்பவற்றை பாது கத்துக் கொள்ளவும். 

6. ஷுஹதக்களின் இரத்தங்களின் மீதும் தாய்மார்களின் உறவுகளின் கண்ணீர் மீதும் கட்டி எழுப்பபட்ட எமது உரிமைப் போராட்ட (அரசியல்) அமானிதத்தை மீட்டெடுத்து முன்னெடுப்பதற்காக.

7. இணைந்த வடகிழக்கில் இரண்டாந்தர சிறுபான்மையாக இனியும் நாம் நடத்தப் படுவதனை கனவிலும் நினைக்கக் கூடாது என்பதற்காக.

8. சமூக போராட்டங்களை சொத்து சுகம் சேர்க்கும் சூதாட்டங்களாக மாற்றி அரசியல் வியாபாரம் செய்யும் குபேரார்களை இனம் கண்டு அவர்களுக்கு உரிய தீர்ப்பை மக்கள் மன்றில் வழங்குவதற்காக!

9. மேலே சொல்லப்பட்ட விடயங்களை முறையாக உள்வாங்கி ஆவன செய்யவல்ல பொறிமுறைகளை கண்டறிந்து அவற்றை அமுலாக்கம் செய்யத் திராணியுள்ள ஈமானியப் பலமுள்ள இளம் தலைமுறைத் தலைமைகளை உருவாக்குவதற்காக..

10. அரசியல் தலைமைகள் கட்டுப் படுத்தக்க் கூடிய பலமான சிவில் தலைமைகளை எல்லா மட்டங்களிலும் தோற்றுவிப்பதற்காக.

11. தனிநபர் எதேச்சதிகார அரசியலில் இருந்து சமூகத்தை மீட்டு இஸ்லாம் சொல்லும் ஷூரா முறையிலான கூட்டுப் பொறுப்பும் வெளிப்படைத் தன்மையும் உள்ள தலைமைகளை உருவாக்குதல். 

12. இவ்வாறு உயரிய இலக்குகள் இல்லாத விடத்து வருடாவருடம் நினைவு தினங்களை அனுஷ்டிப்பது அர்த்தமற்ற செயலாகிவிடும் என்பதனை அவ்வப்போது நினைவிருத்திக் கொள்வதற்காக.

Inamullah Masihudeen

2 comments:

  1. LTTE-Animals don't know humanity. Karuna played a major role for this massacre.

    ReplyDelete
  2. இது போன்ற அவல நிலை இனி நாட்டில் ஏற்படாது.சகல மக்களும் சுதந்திரமாகவும் . இன ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உறுதியான நிலைப்பாட்டுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. யுத்த நாயகனை மறந்து நன்றி கட்ட முஸ்லீம் சமூகம் மஹிந்தவை உதறித்தள்ளிவிட்டு யூதக் கொள்கையைக் கொண்ட கட்சினரை ஆட்சி பீடத்தில் அமர்த்தி உள்ளது .இந்த யு என் பி முஸ்லிம்களுக்கு செய்துள்ள நல்ல விடயங்கள்

    1990 வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்

    1990 காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் .

    1990 ஏறாவூர் சாதம் ஹுசைன் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முஸ்லிம்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்கள் .

    1990 குருக்கள் மடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முளிம்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கட்டார்கள்

    1990 அழிச்சி பொத்தானையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முஸ்லிம்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்

    ## 1.கதுருவெல நகரம் பொலன்னறுவைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

    ## 2. வவுனியா பழைய நகரம் புதிய நகரத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது

    ## 03.கொழும்பு குணசிங்க புறத்தில் பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள் சிறுபான்மைகளாக்கப்பட்டார்கள்

    ## 04.இரத்தின கல் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்த முஸ்லிம்களின் வியாபாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய இரத்தின கல் அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டது

    ## 05.2000 ம் ஆண்டு மூதூர் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப் பட்டர்கள்

    ## 06. 2017 ம் ஆண்டு காலி கிந்தோட்ட பகுதில் சிங்கள முஸ்லீம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது

    ## 07. 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அம்பாறையில் சிங்கள முஸ்லீம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது

    ## 08 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில்கண்டி தெல்தோட்டையில் சிங்கள முஸ்லீம் இன கலவரம் ஏற்படுத்தப்பட்டது

    ReplyDelete

Powered by Blogger.