August 26, 2018

பைஸர் முஸ்பதா உடனடியாக, பதவி விலக வேண்டும் - கூட்டு எதிரணி

எல்லை நிர்ணயம் என்ற பெயரில் மக்களின் பணத்தினையும், காலத்தினையும்  வீணடித்து  மாகாண சபை தேர்தலை  பிற்போட கபட நாடகம் ஆடும் மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்பதா உடனடியாக பதவி விலக வேண்டுமென கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை  புதிய தேர்தல் முறையின் பிரகாரம் நடத்துவதற்கான அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.  அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட  ஒரு பிரேரணை அரசாங்கத்தினாலே  நிராகரிக்கப்பட்டமை பாராளுமன்ற வரலாற்றிலே முதன் முறையாக இடம் பிடித்துள்ளது.

அரசாங்கம் ஒரு போதும் மாகாண சபை தேர்தலை நடத்தாது . ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே அரசாங்கத்தின் தற்போதைய  நிலைப்பாடாக காணப்படுகின்றது. தேர்தலை பிற்போடவே  அனத்து தரப்புக்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.  சுயாதீனமாக இடம்பெற வேண்டிய  தேர்தலுக்கு மாகாண சபைகள் மற்றும்  உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவே தடையாக காணப்படுகின்றார்.

 எல்லை நிர்ணயம் என்ற விடயத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் தேர்தலை பிற்போட இவரே வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுத்தார். இவர் கொண்டுவந்த அறிக்கைக்கு இவரே  ஆதரவாக வாக்களிக்கவில்லை.  

தேசிய நிதி மற்றும்  காலத்தை எவ்வாறு மோசடி செய்ய வேண்டும்  என்று அரசாங்கம் தற்போது புதிய வழிமுறைகளை கண்டுபிடித்துள்ளது. எவ்விடயத்திற்கும் பிரத்தியேக குழுக்களை ஸ்தாபித்து மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கின்றது என்றார்.

2
பாராளுமன்றத்தில் கொண்டு வரபட்ட மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடிக்கப்பட்டமையால், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா பதவி விலக வேண்டம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.பீ. ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

ஹட்டன் நகரில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சி.பீ. ரத்நாயக்க இதனை தெரிவித்தார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.பீ. ரத்நாயக்க, எந்த முறையிலாவது மாகாண சபை தேர்தலை நடத்தினாலும் அதற்கு நாங்கள் தயார், அதனால் தான் கூறுகின்றேன் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ என்பதனை நான் உறுதியாக கூறுகிறேன் என குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினை சார்ந்த நாங்கள் பிழையான விடயங்களை பிழையென கூறுவோம், சரியான விடயங்களை சரியென கூறுவோம், ஆகையால் தான் பிழையான விடயங்களுக்கு நாங்கள் எதிர்பினை தெரிவிக்கின்றோம். 

இதேவேளை, கொழும்பில் எதிர்வரும் 5 ஆம் திகதி நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக இடம் பெறவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு மலையக மக்களை கலந்து கொள்ளுமாறும் இந்த ஊடக சந்திப்பின் போது அவர் மேலும் கோரிக்கை விடுத்தார். 

3 கருத்துரைகள்:

God AllMighty Allah should destroy this deceptive, hoodwinking, MUNAAFIKK
Muslim politician from the political arena and playing ground of politics and especially Muslim politics in Sri Lanka. The biggest Political Chameleon who prostitutes the legal profession to out-beat the LAW to always become a LIST MP and then Minister should be wiped out of Sri Lanka politics by God AllMighty Allah. Let us all ask "DUA" that this should happen soon, Insha Allah. There are many other Muslim "MUNAAFIKK" politicians who deserve the same, Insha Allah. May God AllMighty Allah begin with this person, Insha Allah. It is time up that the Muslim community deserve that these type of self serving Muslim politicians should be removed from the political arena and young and diligent, honest and committed Muslim political aspirants should come to the helm to defend the Muslim community in the future, Insha Allah.
Noor Nizam.
Convener - "The Muslim Voice".

தெரிவு செய்யாமலே பின் கதவால் நுழைந்த மானம் கெட்ட முஸ்தபாவின் வேலையே இதுதான், எல்லோரையும் குழப்பி சண்டை பிடிக்க வைப்பதும் , காலத்தை வீணடிப்பதும் பிரகு மக்களின் பிரதிநிதி என்று தன்னைத்தானே கூறி எல்லோரையும் ஏமாற்றுவதும். தந்திரத் தொழிலை சரியாய் செய்வார் . முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால் நன் கதைக்கிறேன் என்று கதை விடுவார் தந்திரத் தொழிலுக்கு பொருத்தமானவர் கலிமா தெரியுமா ? என்று check பன்ன வேனும்

இவனுக்கு பல முஸ்லிம்களுடைய சாபம் இன்னும் இன்னும் கேவலப்படுவான். இறைவன் இவ்வளவு வேகமாக கொடுப்பான் என்று எண்ணிப்பார்க்கவில்லை

Post a Comment