Header Ads



சவுதியில் பணியாற்றும், இலங்கையர்களுக்கு முக்கியமான தகவல்

சவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் வகையில் சட்டங்கள் கடுமையாக்கப்படவுள்ளன.

சவுதி அரேபியாவில் பணிக்காக செல்லும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தல், சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்து சேவை பெறல், உரிய முறையில் சம்பளம் வழங்காமை ஆகிய விடயங்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சவுதி வெளிநாட்டு கடவுச்சீட்டு அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய வெளிநாட்டு பணியாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் நடவடிக்கை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும்.

எப்படியிருப்பினும் சட்டவிரோதமான முறையில் சவுதியில் தங்கியிருப்பவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அவ்வாறு பாதுகாப்பு வழங்கும் நபர்களுக்கு 15000 சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும். உதவுபவர் வெளிநாட்டவராக இருந்தால் அவர் நாடு கடத்தப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.