Header Ads



குடும்ப விவகாரங்களில், நான் தலையிடுவதில்லை - ரணில்

குடும்ப உறுப்பினர்களின் விவகாரங்களில் தான் தலையிடுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது சகோதரர் ஷான் விக்ரமசிங்கவுக்கு சொந்தமான தொலைககாட்சியின் ஒளிப்பரப்பு கருவிகள் கழற்றிச் செல்லப்பட்டமை குறித்து அமைச்சர் லஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.

இப்தார் நிகழ்வில் கலந்துக்கொண்ட அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உரையாடியுள்ளார்.

“ உங்களது சகோதரரின் ரி.என்.எல். தொலைக்காட்சியின் உபகரணங்களை பொலிஸார் சென்றுள்ளனர். இது பற்றி ஜனாதிபதியிடம் பேசவில்லையா?” என கிரியெல்ல கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள பிரதமர், “ இல்லை குடும்பம் சம்பந்தப்பட்ட விடயங்களில் தலையிடுவதில்லை. ஷான் என்னை தொடர்புக்கொண்டு விடயத்தை கூறினார். அதில் தலையிடுமாறு கூறவில்லை.

நான் இப்படியான விடயங்களில் தலையிட மாட்டேன் என்பது ஷானுக்கு தெரியும். பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம் என ஷான் கூறியதாக” பிரதமர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.