Header Ads



கோத்தபாய தவறான பாதையில் செல்கிறார் - அவரை சுற்றி அடிப்படைவாதிகள் உள்ளனர்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தவறான பாதையில் செல்வதாகவும் அவரை சுற்றி பெரிய செல்வந்த குபேரர்களும், அடிப்படைவாத இராணுவ அதிகாரிகளும் இருப்பதாகவும் சிரேஷ்ட அரசியல் விமர்சகரும், முன்னாள் ராஜதந்திரியுமான கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். கலாநிதி தயான் ஜயதிலக்க, கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் வருகைக்காக முதலில் ஆரம்பிக்கப்பட்ட எளிய அமைப்பின் பிரதானியாக செயற்பட்டதுடன் அந்த அமைப்புக்காக பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இந்த நிலையில், கோத்தபாய ராஜபக்ச தவறான பாதையில் செல்வதாக தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான இருந்தவர்கள் அவரை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருப்பது இது தெளிவுப்படுத்தியுள்ளது.

கோத்தபாய ராஜபக்ச எந்த போர்வையை போர்த்திக்கொண்டு அரசியலுக்குள் பிரவேசிக்க முயற்சித்தாலும் அவரது உண்மையான சுயரூபம் அவருக்கு நெருக்கமானவர்களுக்கே தெரியும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

கோத்தபய ராஜபக்ச அரசியலுக்கு கொண்டு வர ஆரம்பித்தில் குரல் கொடுத்த நபர்கள் கூட தற்போது அவரது செயற்பாடுகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்துள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. கோத்தபாயவே ஒரு அடிப்படைவாதி, தீவிரவாதி, சிங்கள கடும்போக்காளர், ஆக அவரை சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்.
    அது சரி தயான் அவர்களே, நீங்கள் பதவிக்காக கொள்கை பேசுபவராக இருக்கிறீர்களே கொஞ்சம் கேவலமாக தெரியல???

    ReplyDelete
  2. கோத்தபாயவே ஒரு அடிப்படைவாதி, தீவிரவாதி, சிங்கள கடும்போக்காளர், ஆக அவரை சுற்றி இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்.
    அது சரி தயான் அவர்களே, நீங்கள் பதவிக்காக கொள்கை பேசுபவராக இருக்கிறீர்களே கொஞ்சம் கேவலமாக தெரியல???

    ReplyDelete

Powered by Blogger.