Header Ads



கோத்­தா­வின் உதவியை நாடிய, ஜம்­இய்­யத்துல் உலமா

பௌத்த தேரர்­களில் சிலர் முஸ்­லிம்கள் மீது குரோத மனப்­பான்­மையைக் கொண்­டுள்­ளனர். இன­வா­தத்­தையே பேசு­கி­றார்கள். முஸ்­லிம்கள் எப்­போதும் பெரும்­பான்மை மக்­க­ளுடன் சகோ­தர உற­வினை விரும்­பு­பவர்கள். உங்­க­ளுக்கு பௌத்த தேரர்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­புகள் உள்ளன.

எனவே, நீங்கள் பௌத்த தேரர்கள் சிலர் முஸ்­லிம்கள் மீது கொண்­டுள்ள குரோத மனப்­பான்­மையை களை­வ­தற்கு உதவ வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ கடந்த திங்கட்கிழமை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் கொழும்­பி­லுள்ள தலைமைக் காரி­யா­ல­யத்­திற்கு வருகை தந்தார். உலமா சபைத் தலைவர், செய­லாளர் மற்றும் உறுப்­பி­னர்­க­ளுடன் சிநே­க­பூர்­வ­மான கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டார்.

முஸ்லிம் சமூகம் இன்று பல சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. சட்­டமும் ஒழுங்கும் நாட்டில் நிலை­நாட்­டப்­பட வேண்டும். முஸ்லிம் சமூ­கத்தைப் பற்றி சிலர் தவ­றான கருத்­து­களைப் பரப்­பு­கி­றார்கள். இவை தடை செய்­யப்­ப­ட­வேண்டும். முஸ்­லிம்கள் நாட்­டுப்­பற்­று­டை­ய­வர்கள். எமது தாயகம் இதுவே என உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் தெரி­வித்தார்.

முஸ்­லிம்கள், பொது­ப­ல­சே­னாவை இயக்­கி­யவன் நான் என்றும் அந்த அமைப்­புக்கு ஆத­ர­வாளன் நான் என்றும் தவ­றான கருத்­தைக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அந்த அமைப்­புக்கும் எனக்கும் தொடர்­புகள் இருக்­க­வில்லை. பொது­ப­ல­சேனா அமைப்பு  காலியில் தனது அலு­வ­ல­க­மொன்றின் திறப்பு விழா­வுக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது. அத­னாலே நான் அந்­நி­கழ்வில் கலந்து கொண்டேன் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­க­ளிடம் தெளி­வு­ப­டுத்­தினார்.

உலமா சபையின் பிர­தி­நி­திகள் கோத்­தா­பய ராஜபக்ஷவின் அமெ­ரிக்க விஜயம் உட்­பட அர­சியல் நிலை­மை­க­ளையும் கேட்டு அறிந்து கொண்­டனர்.

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை அர­சி­யல்­வா­திகள், புத்­தி­ஜீ­விகள், வெளி­நாட்டு பிர­மு­கர்கள், துறைசார் நிபு­ணர்கள் என அனைவரையும் எப்போதும் வரவேற்கிறது. கோத்தாபய ராஜபக் ஷ எம்மைச் சந்திக்க விரும்பினார். அழைத்தோம். சந்திப்பு சிநேகபூர்வமாகவே அமைந்தது என ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
-Vidivelli

11 comments:

  1. The directionless ACJU is trying to invite unnecessary trouble.

    ReplyDelete
  2. Super long term thinking.
    We have no other choice!!

    ReplyDelete
  3. ALHAMDULILLAH.
    "THE MUSLIM VOICE" PREDICTED THIS MOVE ALREADY AND PUBLISHED MANY COMMENTS ABOUT WHAT THE ACJU AND THE DECEPTIVE MUSLIM POLITICAL LEADERS AND POLITICIANS WILL DO, Insha Allah. TO GAIN THE FAVOUR OF THE POTENTIAL PRESIDENT OF SRI LANKA IN 2020, GOTABAYA RAJAPAKSA.

    "THE MUSLIM VOICE" WAS RIGHT ONCE AGAIN, ALHAMDULILLAH.

    Noor Nizam.
    Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  4. Timely move towards benefit of our community. Chances much more for him to lead the country
    This is best time to explain problems our community face .
    Better to have a discussion with educationist political leaders . Political difference s shoud not harm this process

    ReplyDelete
  5. சந்திபை வரவேற்கலாம். முக்கியமற்ற நபர்களுடன் கலந்துரயாடுதை விடவும் முக்கியமான சிங்களமக்களின் அபிமானம்முடய தற்காலத்திற்கும் எதிர்காலதிற்கும் மிகப் ஏற்றமுடய ஒரு நபருடன் கலந்துரயாடுவதில் தவறில்லை கையாலாகாதவர்களுடன் காலத்தை வீணடிப்பதில் இனியும் அர்த்தமில்லை.

    ReplyDelete
  6. நாடு வாழப் பொறுத்தமில்லாதது என நாட்டைவிட்டுப் பாய்ந்தோடு வௌிநாட்டில் தஞ்சம்புகுந்து இந்த நாட்டின் முஸ்லிம்களின் எதிரிகளுக்கு வக்காளத்துவாங்கும் முஸ்லிம் பெயரில் இங்கு பெரிய ஆட்கள் என்ற நினைப்பில் கருத்துத் தெரிவித்து புகழ்தேட முனையும் புல்லுருவிகள் பற்றி முஸ்லிம்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என இந்த சமுதாயத்தைக் கேட்கிறேன்.

    ReplyDelete
  7. எனக்கென்ரால் கோட்டா கூட்டு சரியாபடல்ல.

    ReplyDelete
  8. Good decision , right move ? It's sad to see our Muslims seek refuge from a non Muslim than Allah!
    May Allah guide us all.

    ReplyDelete
  9. Mashaa Allah This is a very good job done by ACJU.

    ReplyDelete

Powered by Blogger.