May 18, 2018

சமா­ளிக்கும் பதில்­களை வழங்­கி­ய­ திலும், இருவர் பற்றி துருவித்துருவி விசாரணை

கண்டி மாவட்­டத்தின் பல பகு­தி­க­ளிலும் அண்­மையில் பர­விய இன­வாத வன்­மு­றைகள் தொடர்பில் கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திலும் அமு­னு­க­மவின் கைய­டக்­கத்­தொ­லை­பேசி மேல­திக ஆய்­வு­க­ளுக்­காக ரி.ஐ.டி. கட்­டுப்­பாட்டில் எடுக்­கப்­பட்ட நிலையில் தற்­போது அது சி.ஐ.டி.யின் சிறப்புக் குழு­வொன்­றினால் பகுப்­பாய்வு செய்­யப்­பட்டு வரு­வ­தாக அறி­ய­மு­டி­கின்­றது. தொலை­பே­சிகள் மற்றும் கணி­னி­களில் இருந்து தர­வு­களை வெளிப்­ப­டுத்தும் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவே திலும் அமு­னு­க­மவின் தொலை­பே­சியில் இருந்து தர­வு­களை வெளிப்­ப­டுத்­திக்­கொள்ள ஆய்­வு­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­ய­கத்தின் உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் திலும் அமு­னு­க­மவின் தொலை­பே­சியை ரி.ஐ.டி. கைப்­பற்­றி­யமை தொடர்பில் பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­க­ரவை தொடர்பு கொண்­ட­போது, விஷே­ட­மாக திலும் அமு­னு­க­மவின் தொலை­பே­சியில் இருந்து கடந்த மார்ச் 4, 5 ஆம் திக­தி­களில் பரி­மா­றப்­பட்ட தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொள்­வதை நோக்­க­மாகக் கொண்டே தொலை­பேசி கைப்­பற்­றப்­பட்­ட­தாக அவர் தெரி­வித்தார்.

கொழும்பு- கோட்­டையில் உள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் கடந்த 15 ஆம் திகதி முற்­பகல் 10.50 மணிக்கு ஆஜ­ரான திலும் அமு­னு­க­ம­விடம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் இரவு 11.30 மணி­வரை 12 மணி நேரத்­துக்கும் அதி­க­மாக விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர்.

தெல்­தெ­னிய, -திகன, கட்­டு­கஸ்­தோட்டை, பூஜா­பிட்­டிய, கல­கெ­தர, மெனிக்­ஹின்ன, பல்­லே­கலை பகு­தி­களில் கடந்த மார்ச் 4 ஆம் திகதி இரவு முதல் நான்கு நாட்கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்ற இன­வாத வன்­மு­றைகள் தொடர்­பி­லேயே அவ­ரிடம் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

இதன்­போது வன்­முறை தொடர்பில் கைதான பொது­ஜன பெர­முன கட்­சியின் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் கைது செய்­வ­தற்­காக தேடப்­படும் பிர­தேச சபை உறுப்­பி­னர்கள் தொடர்­பிலும் துரு­வித்­து­ருவி ரி.ஐ.டி.யினர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­த­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

இதன்­போது சமா­ளிக்கும் வித­மான பதில்­களை திலும் அமு­னு­கம வழங்­கி­ய­தா­கவும் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார். இந்­நி­லையில் அவ­ரது கைய­டக்­கத்­தொ­லை­பே­சியை மேல­திக ஆய்­வுக்­காக பயங்­க­ர­வாத பொலிஸார் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்த நிலையில் அவ­சியம் ஏற்­படின் மீள் விசா­ர­ணைக்கு அழைப்­ப­தாகக் கூறி விடு­வித்­துள்­ளனர்.

ஏற்­க­னவே திலும் அமு­னு­க­மவை கடந்த 10 ஆம் திகதி ஆஜ­ராக அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. அதன்­போது அவர் ஆஜ­ரா­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே நேற்று முன்­தினம் அவர் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்­டுள்ளார்.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிர­தானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்­வாவின் மேற்­பார்­வையில் அதன் பதில் பணிப்­பாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஜகத் விஷாந்த தலை­மை­யி­லான பொலிஸ் குழு இந்த இன­வாத வன்­மு­றைகள் தொடர்பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ள நிலையில், இரு பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், மஹாசோன் பல­காய தலைவர் அமித் வீர­சிங்க உள்­ளிட்ட முக்­கிய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும்  இரு பிரதேச சபை உறுப்பினர்கள் கைது செய்வதற்கு தேடப்பட்டு வருகின்றனர். இந் நிலையிலேயே இதுவரையிலான விசாரணைகளில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்றுள்ள சான்றுகள் மற்றும் தகவல்களுக்கு அமைய திலும் அமுனுகமவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

-Vidivelli  MFM.Fazeer

0 கருத்துரைகள்:

Post a Comment