Header Ads



யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் ஹோட்டல் அமைக்க மீண்டும் முயற்சி - போராட்டத்திற்கு அழைப்பு


யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் ஜின்னாஹ் வீதியில் அமைந்துள்ள கலீமா ஒழுங்கையில் “குளோபள் டிரேடிங் சொலூஷன்” நிறுவனம் மினி ரெஸ்டோரன்ட் மற்றும் ஹோட்டல் ஒன்றினை நிர்மானிப்பதற்கு எத்தனித்த சந்தர்ப்பத்தில் அப்பிரதேச முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்; அதனைத் தொடர்ந்து குறித்த வர்த்தகக் கட்டிடத்தின் நிர்மானப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும் தாம் சட்ட ரீதியான அனைத்து அனுமதிகளையும் பெற்றிருக்கின்ற காரணத்தினால் பொதுமக்களின் எதிர்ப்பினைப் பொருட்படுத்தாது நிர்மானப் பணிகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்துவருகின்றமை தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அப்பிரதேச தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்து “ யாழ் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் பாரிய வர்த்தகக் கட்டிடங்களை நிர்மானிப்பதற்கு எதிரான தமிழ் முஸ்லிம் மக்கள் அமைப்பு” ஒன்றினை ஏற்படுத்தி அதனூடாக மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் வர்த்தக நோக்கிலான கட்டிடங்கள் வேண்டாம் என்னும் தலைப்பில் அமைதிப் பேரணியொன்றுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள்.

எதிர்வரும் 25-05-2018 வெள்ளிக்கிழமை மதியம் 1:30 மணிக்கு குறித்த பேரணி யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரம், ஜின்னா வீதியின், கலீமா ஒழுங்கை சந்திக்கு அருகாமையில் நடாத்துவதற்கு அழைப்பு விடுத்திருக்கின்றார்கள், ஹோட்டல்; மதுபான நிலையங்கள்; களியாட்ட நிலையங்கள் வேண்டாம் என்னும் அமைப்பில் இடம்பெறும் இவ்வமைதிப் பேரணிக்கு மக்கள் நலன் விரும்பும் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் பெருந்திரளான பிரதேச மக்கள் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்

3 comments:

  1. ஒரு கட்டடம் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்க முதல், மேற்படிவிடயங்களை கவனத்தில் எடுத்திருப்பார்களே. எனவே அனுமதி கொத்தவர்களுக்கு எதிராக போய் சட்ட நடவடிக்கை எடுங்கள்.

    இந்த காலத்தில் ஓட்டல்கள் தேவையானவை, அதனால் சீர்கேடுகள் ஒன்றுமில்லை.
    இது வேறு ஒரு காரணத்திற்காக போராட்டம்.

    ReplyDelete
  2. Where is HUMAN right groups... When the people all together in this area are considering this hotel will destroy the culture of people and may even lead to gambling and prostitution..among future generation.. Why Government and Cultural Ministry not considering the request of the people.

    Schools, Masjids, Temples and many more good places will be affected by this Western tourism among public.

    Keep away the ugly west bikini and gambling from harming a civilized Sri Lankan culture.

    Call MY3 and Ranil to wake up from sleep

    ReplyDelete
  3. இலங்கையில் நூற்றுக்கணக்கான நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. அவைகளை அண்டி பெருமளவாக மக்கள் வாழ்கிறார்கள், முஸ்லிம்கள் உட்பட.

    அங்கெல்லாம் பிரச்சனைகள் வரவில்லையா?, மக்கள் வாழவில்லையா?, ஏன் அங்கெல்லாம் அதை எதிர்த்து போராடவில்லை?

    ReplyDelete

Powered by Blogger.