Header Ads



மகிந்தவின் சூப்பர், நக்கல் இது

அமைச்சரவை மாற்றத்தின் போது விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வனவிலங்கு அமைச்சு மாத்திரமே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த அமைச்சை உயிரியல் விஞ்ஞான ரீதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அமைச்சர் வருவதாக கேள்விப் பட்டால் காட்டிலுள்ள விலங்குகள் பாய்ந்து ஓடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று (01) நடைபெற்ற சமய நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன இன்று வழங்கவுள்ள அமைச்சுக்கள் விஞ்ஞான ரீதியில் அமையும் என அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

வனவிலங்குகள் அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு இம்முறை அமைச்சரவை மாற்றத்தின் போதாவது வழங்கப்படும் என அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அவ்வமைச்சு ஏற்கனவே இருந்த அமைச்சருக்கே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

-Dc-

1 comment:

  1. சரத்துக்கு சட்டம் ஒழுங்கு அமைச்சு வழங்கப்பட்டிருந்தால், காட்டில் ஓடி ஒழிந்திருக்க வேண்டியவர்கள்: 'சிங்க-லே'களுக்கு மட்டும் தலைவரான மஹிந்தவும், அவரைத் தட்டிக் கேட்ட எஞ்சிய புலிகளும்தான்.

    ReplyDelete

Powered by Blogger.