Header Ads



பதுளையில் முஸ்லிம் வர்த்தகர்கள் பீதி - பொதுபல சேனாவும் களத்தில், சமரசத்திற்கும் முயற்சி

பதுளை நகரில் முஸ்லிம் நபர் ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற சிறு சம்பவம் பதுளை வை எம் எம் ஏ , மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் , உவா முஸ்லிம் கல்வி அபிவிருத்தி சங்கம் உள்ளிட்ட பதுளை சிவில் அமைப்புகளின் தலையீட்டினால் இனவாத பிரச்சினையாக உருவெடுக்காமல் தடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மலையக முஸ்லிம் கவுன்சில் தலைவர் எ எம் எம் முஸம்மில் அவர்களை  நாம் தொடர்புகொண்டு கேட்டபோது ,

பதுளை நகரில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான திஹே கடே என்ற வர்த்தக நிலையத்தில் பொருட்களை கொள்வனவு செய்யவந்த சிங்கள வாலிபர்கள் பொருட்களை திருடியுள்ளதாக கூறப்படும் அதேவேளை கடந்த வாரமும் குறித்த வர்த்தக நிலையத்தில் திருடுபோன மோபைல் போன் தொடர்பிலும் விசாரித்துள்ளனர்.

அதன் போது அங்கு தடுமாறியுள்ள பெரும்பான்மை வாலிபர் தான் இரத்தத்தால் கையொப்பம் இட்டு சத்தியம் செய்வதாக கூறி தனது கையை கிழித்துக்கொண்டுள்ள  கூறப்படும் அதேவேளை தனது கையை முஸ்லிம் தரப்பினர் கிழிக்க  வற்புறுத்தியதாக குறித்த வாலிபர்  பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்..

குறித்த சம்பவம் தொடர்பில் பதுளை மாவட்ட பொதுபல சேனா முக்கியஸ்தர் ஊவா முதல்வரை சந்தித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதனை தொடர்ந்து பதுளை நகரில் குறித்த முஸ்லிம் வர்த்தக நிலையத்திற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள அதேவேளை அங்குள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பீதியடைள்ளனர்.

அதனை தொடர்ந்து பதுளை வை எம் எம் ஏ , மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் , உவா முஸ்லிம் கல்வி அபிவிருத்தி குழு உள்ளிட்ட பதுளை சிவில் அமைப்பு உறுப்பினர்கள்  ஊவா முதல்வரை சந்தித்து இது தொடர்பில் சமரசத்திற்கு வந்த  அதேவேளை இந்த விடயத்தில் சட்டத்தை செய்யுமாறு வழியுறுத்தினோம்.

குறித்த வர்த்த நிலையத்தின்  உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

மேலும் அங்கு பதட்டம் ஏதும் இல்லை எனவும் அவர்  குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.