Header Ads



பாவங்களில் ஈடுபடும்முன், அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான் - ஜப்பான் இளைஞர்

சிந்தனி என்ற இயற்பெயரையுடைய ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இந்த சகோதரர் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் சுயமாக இணையதளங்களில் இஸ்லாத்தை தேடிப்படித்து இஸ்லாத்தின் அழகிய போதனைகளால் ஈர்க்கப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுத்து தனது பெயரை சுஹைப் என்பதாகவும் மாற்றிக்கொண்டார்.

இவரது குடும்பத்திலுள்ள தாய், தந்தை ஏனையோர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத போதிலும் தொழுகைக்காக மாத்திரம் இவர் மினாடோவிலுள்ள நகோயா போர்ட் மஸ்ஜிதுக்கு ஒன்றரை மணித்தியாலங்கள் ரயிலில் பயணித்து வந்து தொழுது விட்டுச் செல்கிறார்.

தொழுகைக்கு முன்பும் பின்பும் பள்ளி வாசலில் அமர்ந்த படி இஸ்லாத்தை படிப்பதிலும் அல்குர்ஆன் விரிவுரை நூல்களை ஆய்வு செய்வதிலுமே தனது அதிகமான நேரத்தை பயன்படுத்துவதை நான் என் கண்களால் கண்டு வியந்து போனேன்.

அவரது இந்த மாற்றம் பற்றி என்னிடம் அவர் கூறும் போது நான் 21 வயதில் நண்பர்களுடன் சேர்ந்து மதுபானம் ஏனைய பாவங்களில் ஈடுபடும் முன்பே அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டிவிட்டான் என்றார். (21 வயது வரை ஜப்பான் நாட்டுச் சட்டப்படி மதுபானம் தடை)

தொழில் ரீதியாக இவர் ஒரு பொறியாளராக (Engineer) Toyota கார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், தற்போது இவருக்கு வயது 24 என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லிமாகவே பிறந்து முஸ்லிமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமது நிலை என்ன ? இந்த ரமழானிலாவது அல் குர்ஆனை பொருளுணர்ந்து அதன் தப்ஸீர் விளக்கங்களை அறிந்து ஓத முயற்சித்தோமா..?

இப்படிப்பட்ட மனிதர்களை எமக்கு முன் நிறுத்தி இவர்களை வைத்துக் கொண்டு அல்லாஹ் நம்மிடம் கேள்வி கணக்கு கேட்டால் அல்லாஹ்வுக்கு நாம் என்ன பதில் சொல்லப் போகிறோம் ?

அல்லாஹ் இவரது பாதங்களை இந்த சத்திய மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வானாக!

By - Shk TM Mufaris Rashadi.

1 comment:

  1. எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.
    (அல்குர்ஆன் : 2:82)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.