Header Ads



ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்கள் ஒற்றுமை, நல்லிணக்கம் பற்றி எப்படி பாடம் எடுப்பார்கள்..?


-Sajath Mohamed-

காத்தான்குடி மத்திய கல்லூரியில் நான் பயின்ற காலம். 2006 O/L
நிறைய இந்து ஆசிரியர்கள் எமக்கு கற்பித்தார்கள்.

ஜோதிராஜா சேர், சரோஜினி டீச்சர், தவனேஸ்வரன் சேர், உதயா டீச்சர், தமயந்தி டீச்சர் ஆகியோர் இன்றும் எம்மனதில் நிலைத்திருப்பவர்கள்.

அவர்கள் எங்களிடம் இனவாதமோ மதவாதமோ காட்டியதில்லை. எமது கலாச்சார ஆடைகளை குறைகூறவில்லை. கிண்டலாக கூட எதையும் சொன்னதில்லை.

ஜோதிராஜா சேர் பெளதீகவியலில் எமக்கு மறக்கமுடியாத ஒரு ஆசான். எப்போதும் இன்முகத்துடன் பழகுவார். எமது நிறைய சந்தேகங்களை அலுப்பில்லாமல் தெளிவுபடுத்துவார். Free timeல் Physics labற்கு போனால் நேரம் போவதே தெரியாது.

தமிழ் இலக்கியப்பாட சரோஜினி டீச்சர் மற்றும் சமூகக்கல்விப்பாட தவனேஸ்வரன் சேரும் மிகக் கண்டிப்பானவர்கள். ஆனால் தங்களது பாடங்களை முறையாகக் கற்பிப்பதிலும் எங்கள் சந்தேகங்களை தீர்த்து வைப்பதிலும் என்றும் பின்னிற்பதில்லை. உதாரணமாக O/L exam அண்மித்தபோது எமது பாடசாலை விஷேடமாக பின்னேர வகுப்புகளை ஆரம்பித்தது. தவனேஸ்வரன் சேர் துவிச்சக்கர வண்டியில் மட்டக்களப்பிலிருந்து வந்து எங்களுக்கு கற்பிப்பார். இத்தனைக்கும் அது ஒரு இலவச வகுப்பாகும். 

தமயந்தி டீச்சர் மிகுந்த நட்புறவுடன் பழகுவார். ஆனால் பாடங்களை தெளிவாகவும் ஆர்வமாகவும் கற்பிப்பதில் வல்லவர். திடீரென Transferல் போகும்போது கூட Syllabusல் கடைசி இரு பாடங்களை கற்பிக்க முடியவில்லையே மிக கவலைப்பட்டார்.

இன்றும் மட்டக்களப்பில் பிரபல பாடசாலைகளில் நிறைய முஸ்லிம் மாணவர்கள் கற்கின்றனர். தங்கள் கலாச்சார ஆடைகளை அணிய பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. கற்று வெளியேறி சமூகத்தில் நல்லநிலைமைகளில் உள்ளனர். தங்கள் பாடசாலையை ஆசான்களை நேசிக்கின்றனர்.அங்கு இந்த இனவாதம் துளியளவும் இல்லை.

பிறசமூக கலாச்சாரத்தை அழித்துத்தான் தன் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டியதில்லை. 

தனது கலாச்சார உடையுடன் நடமாட இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் முழு சுதந்திரம் உள்ளது. அதை கழற்று என்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

ஆர்ப்பாட்டம் நடத்த எத்தனையோ விடயங்களிருக்க ஆடையை கழற்றச்சொல்லி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

இன்று ஆர்ப்பாட்டம் செய்த ஆசிரியர்கள் எதிர்காலத்தில் மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கம் பற்றி எந்த முகத்தை வைத்துக்கொண்டு பாடம் எடுப்பார்கள்?

6 comments:

  1. இதையே சொல்லி சொல்லி தான் தமிழரை நம்ப வைத்து எல்லா திசையிலும் கருவறுத்தீர்கள். அதுவொரு காலம் நாங்கள் பலமாகவும் வளமாகவும் இருந்த காலம் அப்பொழுது எங்கள் மேல் குதிரையோட்ட விட்டுக்கொண்டிருந்தோம். ஆனால் இப்பொழுது நாங்களே நலிவடைந்து உங்கள் போல் நம்பிக்கை துரோகிகளால் பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றோம். இனியும் முதுகில் குதிரை ஓட்ட அனுமதியோம்.

    ReplyDelete
  2. தமிழனை நம்பலாம். நம்ப வேண்டும். அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே!

    இந்துத்துவா, சிவா சேனாக் காவாலிகளை ஒருபோதும் நம்பக் கூடாது.

    இவர்கள் கூட இருந்து குழி பறிப்பவர்கள்.

    இந்தியாவின் எடுபிடிகள்.

    ReplyDelete
  3. I challenge all non Muslims to shows us a better dress code then Islamic dress codes.

    ReplyDelete
  4. @sampanthan tna,
    அதை தான் நாங்களும் சொளுகின்றோம். தமிழ் பேசும் முஸ்லிம்கள் எங்கள் இனம் ஆனால் அவர்களை அரபு வழி வந்த இனவாதிகள் அவர்களை எமிடம் இருந்து தனிமை படுத்திவிடர்கள். பல நூற்றாண்டுகள் பின்னி பிணைந்த தமிழ் முஸ்லீம் உறவை ஓரிரு வருடங்களில் அந்த அரபு வழி வந்தவர்கள் பிரித்தார்கள். அதுதான் நாங்கள் இந்த அரபு வழி அடிப்படை வாதத்துக்கு எதிரானவரகள். இந்த அரேபிய தீவிரவாதத்தை இலங்கை மண்ணில் விதைக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். நீங்கள் நல்லவர்கள் ஆனால் என்ன உங்களுடைய மார்க்கம் போதிக்கும் சில அடிப்படைகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. அதனால் தான் இலங்கையில் காலூன்ற முனையும் ஐஸ் ஐஸ் தீவிரவாதத்தை அடியோடு மறுதலிக்கின்றோம்

    ReplyDelete
  5. “இந்துக் கல்லூரி இந்துக்களுக்கே, இனவாதம் இங்கே வேண்டாம்”
    இதை விட இனவாதம் உண்டா? இவ்வாறுதான் இவர்கள் மாணவர்களுக்குப் பாடம் படிப்பிப்பர் போலுள்ளது.

    ReplyDelete
  6. Chandarbol,
    You are the one racist.we don't need to travel along with u for the right.we know very well that we can not take small right in combined north east rule.thatswhy all Muslims are not ready to merge north east because of your anti Muslim propaganda.

    ReplyDelete

Powered by Blogger.