Header Ads



சத­கத்­துல்லா மௌலவி, ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை

கண்டிப் பிர­தே­சத்தில் கடந்த மாதம் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளின்­போது பஸ்ஸில் பயணம் செய்து கொண்­டி­ருக்­கையில், இன­வா­தி­களால் தாக்­கப்­பட்டு படு­கா­ய­ம­டைந்த ஏ.சி.எம்.சத­கத்­துல்லா மௌலவி 50 நாட்கள் கடந்­துள்ள நிலை­யிலும் தொடர்ந்தும் கண்டி அர­சாங்க வைத்­தி­ய­சா­லையில் அதி­தீ­விர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

கடந்த மார்ச் 7 ஆம் திகதி அக்­கு­ற­ணை­யி­லி­ருந்து கண்டி நோக்கி இ.போ.ச. பஸ்ஸில் பய­ணம்­செய்து கொண்­டி­ருக்­கையில் பஸ்ஸை நிறுத்தி இன­வா­திகள் சத­கத்­துல்லா மௌல­வியைத் தாக்­கி­னார்கள். தாக்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து இன்­று­வரை அவர் வைத்­தி­ய­சா­லையில் பேச­மு­டி­யாது ஆபத்­தான நிலையில் சிகிச்சை பெற்று வரு­கிறார்.

அவ­ரது உடல் நிலையில் எவ்­வித மாற்­றமும் ஏற்­ப­டா­த­தினால் உற­வி­னர்கள் அவ­ரது மேல­திக சிகிச்­சைக்கு உதவி புரி­யு­மாறு இரா­ஜாங்க அமைச்­சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் மற்றும் அமைச்­சர்­க­ளான எம்.எச்.ஏ.ஹலீம், ரிசாத் பதி­யுதீன் ஆகி­யோ­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளார்கள்.

கண்டிப் பிர­தே­சத்தில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களின் போது காயங்­க­ளுக்­குள்­ளா­ன­வர்­க­ளுக்கு புனர்­வாழ்வு அமைச்சு நஷ்­ட­ஈடு வழங்­கி­யுள்­ள­போ­திலும் சத­கத்­துல்லா மௌல­விக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது சகோ­தரர் ஏ.சி.அமா­னுல்லா விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

'கடந்த மார்ச் மாதம் 7 ஆம் திகதி கண்டி அர­சினர் வைத்­தி­ய­சாலை அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு­ம­திக்­கப்பட்ட சத­கத்­துல்லா மௌலவி சில தினங்­களின் பின்பு 51 ஆம் விடு­திக்கு மாற்­றப்­பட்டார். அங்கு மீண்டும் அவர் கடும் சுக­வீ­ன­முற்­ற­தை­ய­டுத்து அதி தீவிர சிகிச்சைப் பிரி­வுக்கு மாற்­றப்­பட்டு இன்­று­வரை சிகிச்சை பெற்று வரு­கிறார். தலையில் பல­மாக தாக்­கப்­பட்­டுள்­ளதால் அவ­ரது மூளை பாதிக்­கப்­பட்­டுள்­ளது என்றும் அவர் கூறினார்.

அவ­ரது சிகிச்­சைக்­காக வைத்­திய நிபுணர் சுனில் பெரே­ராவை நாட­வேண்­டி­யுள்­ளது. இதற்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டும். வைத்திய நிபுணரின் விஷேட சிகிச்சைகளை நடத்தினாலேயே அவரைக் காப்பாற்ற முடியுமென நினைக்கிறோம்' என்றும் அவர் கூறினார்.

-Vidivelli

No comments

Powered by Blogger.