Header Ads



முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா  அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லையின் ஆசி­ரி­யைகள் பெற்றோர் மற்றும் பழைய மாண­வர்கள் நேற்று முன்­தினம் பாட­சா­லைக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இத­னை­ய­டுத்து இந்த விவ­காரம் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்றுக் காலை திரு­கோ­ண­மலை வலயக் கல்வி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

முஸ்­லிம்கள் அச்­சு­றுத்­தி­ய­தாக நான் கூற­வில்லை

சம்­பந்­தப்­பட்ட முஸ்லிம் ஆசி­ரி­யை­களோ அல்­லது அவர்­க­ளது கண­வன்­மாரோ என்னை அச்­சு­றுத்­தி­ய­தாக நான் யாரி­டமும் கூற­வில்லை. அவ்­வா­றான சம்­பவம் நடக்­கவும் இல்லை என திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியின் அதிபர் தெரி­வித்தார். இந்த விவ­கா­ரத்தில் எமது நிலைப்­பா­டுகள் வேறு­பட்­ட­தாக இருக்­கின்ற போதிலும் நாங்கள் முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுடன் புரிந்­து­ணர்­வு­ட­னேயே நடந்து கொள்­கிறோம். முஸ்லிம் ஆசி­ரி­யை­களும் எம்முடன் நட்புடனேயே உள்ளனர். என்னை எவரும் அச்சுறுத்தவில்லை. நான் அவ்வாறு யாரிடமும் கூறவுமில்லை. முஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தியதாக கூறுவது சோடிக்கப்பட்ட செய்தியாகும் என்றும் அதிபர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

-அப்துல் சலாம் யாசீம்-


4 comments:

  1. அதிபர் இப்பொழுது நடிக்கவும் தொடங்கிவிட்டார் போலும். அதுவும் குழந்தை நட்சத்திரமாக.அவரது ஹிதாயத்துக்காக துஆச் செய்வோம்.

    ReplyDelete
  2. ஆமாம் விக்னேஸ்வர பாடசாலை முன்பும் போராட்டம் நடைபெறவில்லையாம்.

    ReplyDelete
  3. Now she fears that she will be produced in courts.

    She is like a chameleon.

    ReplyDelete
  4. பச்சோந்தி....

    ReplyDelete

Powered by Blogger.