Header Ads



வசந்தம் Tv முசாரப் இடைநிறுத்தம் - காரணம் வெளியாகியது


வசந்தம் தொலைக்காட்சியில்  பணியாற்றிய  முசாரப்,  பணிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை எதிர்ப்பதற்காக,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலஞ்சம் வாங்கியதாக விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில்   பேசியதை (பத்திரிகையில் எழுதப்பட்டு இருந்ததை) வாசித்தமைக்காகவே, அவர் இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக Jaffna Muslim  இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது, பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை எதிர்ப்பதற்காக மு.கா. இலஞ்சம் வாங்கியதாக கூறியிருந்தார்.

எனினும் பிரதியமைச்சர் பைசல் காசிம் அதனை மறுத்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. அட நாதாரி. எல்லாம் நல்லாத்தானே போய்ட்டு இருந்திச்சி.சொரணை கெட்ட அரசியல்வாதிகள் ஊடகங்களுக்குள் தமது கைவரிசை காட்டத் தொடங்கிட்டானுகள்.

    ReplyDelete
  2. முஸார்ரப் எப்போது கருத்து வெளியிட்டார்? எந்த நிகழ்ச்சியில்? கட்டுரையாளர் பதில் தரவேண்டும்.

    ReplyDelete
  3. இவ்வாறுதான் அன்று நவ்சாத் முகைடீனயும்
    வலக்கவைத்தார்கள் இன்று முஸர்ரப் நாளை
    யாரே?சிறந்த ஊடகவியலாளரகள் இவ்வாறு
    நீக்கப்படுவது அந்த நிகழ்ச்யை நீக்குவதற்கு
    சமன் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறிவார்களா?

    ReplyDelete
  4. அப்போ செய்தி வாசிப்பவர் நினைத்ததெல்லாம் வாசிக்கமுடியும்மென்றால், செய்தித்தொகுப்பாளர் என்று ஒருவர் இத்தொலைக்காட்ச்சிக்கு இல்லையோ? அப்படியெங்கும் நடப்பதில்லை. தயவுசெய்து பார்த்து கட்டுரை எழுதுங்கோ bro.

    ReplyDelete
  5. முஸ்லிம் காங்கிரஸுக்கு குழிபறிப்பதில் குறியாயிருக்கும் மங்களவின் அமைச்சில் இவ்வாறு நடந்தது என்பதை ஏற்றுக்கொள்ள கடினமாகவுள்ளது

    ReplyDelete
  6. செய்தி உண்மையாயின் கவலைக்குரியது. பத்திரிகையில் உள்ள எல்லா விடயங்களும் சொல்லப்படுவதில்லை. சில விடயங்களை அழுத்திச்சொல்லும் போது எமது நிறம் வௌிவந்து விடும். அவதானம் அதிகம் தேவை. நானும் அந்நிகழ்சி பார்க்கும் போது அதற்கு அழுத்தம் கொடுத்ததை அவதானித்தேன். அரசியல் வாதிகள் அதிகமான விடயங்களை விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கருத்துப்படத்தான் பேசுவார்கள். அவ்வாறான கதைதான் வீரவன்சவுடையதுமாகும். இதை நம்பி......

    ReplyDelete

Powered by Blogger.