Header Ads



இந்தியா தடை செய்த காரை, இலங்கையில் இறக்குமதி செய்யமுயற்சி

இந்திய அரசாங்கத்தால் பாவனைக்கு பொருத்தமற்றது என தடை செய்யப்பட்ட சிறிய ரக காரினை இலங்கையில் இறக்குமதி செய்வதற்கு சில அரசியல் தலைவர்களால் இரகசியமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய இயக்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முச்சக்கர வாகனங்களுக்கு பதிலாக 2016 ஆம் ஆண்டு இலங்கை போக்குவரத்து திணைக்களத்தினால் இந்தியாவிலிருந்து சிறிய ரக கார் இறக்குமதி செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

எனினும் அக் கார் மக்கள் பாவனைக்கு பொருத்தமற்றது என இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டவையாகும். அதனால் 2016 ஆம் ஆண்டு இலங்கையில் அவற்றை இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

எனினும் மீண்டும் சில அரசியல்வாதிகளின் தலையீட்டினால் அவற்றை இரகசியமாக இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை மக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான ஒரு விடயமாகும்.

No comments

Powered by Blogger.