April 27, 2018

அபாயா + ஹிஜாப் விவகாரம், உயர் நீதி­மன்றம் வழங்கிய தீர்ப்பு இதுதான்...

அபாயா விவகாரத்துக்கு நிரந்தர தீர்வே அவசியம்

திரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் 'அபாயா' எனும் இஸ்­லா­மிய கலா­சார ஆடையை அணிந்து கற்­பித்தல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­படக் கூடாது என வலி­யு­றுத்தி பாட­சாலை சமூ­கத்­தினால் நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட ஆர்ப்­பாட்டம் பலத்த சல­ச­லப்பைத் தோற்­று­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரத்­துக்கு தீர்வு காணும் வகையில் நேற்று திரு­கோ­ண­மலை வலயக் கல்வி அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற கூட்­டத்தில் இரு தரப்­பி­னரும் கலந்து கொண்டு தமது கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். இதற்­க­மைய சம்­பந்­தப்­பட்ட ஐந்து முஸ்லிம் ஆசி­ரி­யை­க­ளுக்கும் தற்­கா­லிக இட­மாற்றம் வழங்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இரு மாதங்­களின் பின்னர் நிர்ந்­தர இட­மாற்றம் வழங்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் கல்வி அமைச்சின் சுற்று நிரு­பங்கள் மற்றும் உயர் நீதி­மன்றத் தீர்ப்­பு­க­ளுக்­க­மை­வாக எந்­த­வொரு இலங்கைப் பிர­ஜையும் தமது முக அடை­யா­ளங்­களை மறைக்­காத வகை­யி­லான கலா­சார ஆடை­களை அணிந்து பாட­சா­லை­க­ளுக்குச் செல்­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக 2014 ஆம் ஆண்டு ராஜ­கி­ரிய ஜனா­தி­பதி பாலிகா வித்­தி­யா­லய அதிபர், முஸ்லிம் மாணவி ஒரு­வரின் தாயார் ஹிஜாப் அணிந்து பாட­சா­லைக்குள் நுழை­வ­தற்கு தடை விதித்த விவ­காரம் தொடர்பில் தொட­ரப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் வழக்கில் உயர் நீதி­மன்றம் அளித்த தீர்ப்பு இந்த இடத்தில் கவ­னத்தில் கொள்­ளத்­தக்­க­தாகும்.

அப்­போ­தைய பிர­தம நீதி­ய­ரசர் மொஹான் பீரிஸ் தலை­மையில் நீதி­ய­ர­சர்­க­ளான கே.ஸ்ரீபவன், பிரி­யந்த ஜய­வர்த்­தன ஆகியோர் கொண்ட குழுவே இத் தீர்ப்பை வழங்­கி­யது. அதில் முஸ்லிம் மாண­வர்­களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலா­சார உடை­க­ளுடன் பாட­சாலை வளா­கத்­திற்குள் நுழை­வ­தற்கு பாட­சா­லைகள் அனு­மதி வழங்க வேண்டும் எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அத்­துடன் தேசிய மற்றும் மாகாண பாட­சா­லை­க­ளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தும் என்றும் உயர் நீதி­மன்றம் இத் தீர்ப்பில் சுட்­டிக்­காட்­டி­யது.

இதே­போன்று மேல், ஊவா, மற்றும் தென் மாகாண சிங்­களப் பாட­சா­லை­களில் இவ்­வா­றான ஆடை குறித்த சர்ச்­சைகள் ஏலவே தோன்­றி­யுள்­ளன. இவற்றில் சில வழக்­குகள் நீதி­மன்­றத்­திற்குச் சென்று தீர்வு காணப்­பட்­டுள்­ளன. இவை எவற்­றி­லுமே முஸ்லிம் மாண­வி­களோ அல்­லது ஆசி­ரி­யர்­களோ கலா­சார ஆடை­களை அணிய முடி­யாது எனத் தீர்ப்­ப­ளிக்­கப்­ப­ட­வில்லை.

என­வேதான் இந்த விவ­கா­ரத்தில் பிடி­வா­தங்­க­ளுக்­கப்பால் சட்ட ரீதி­யா­க­வுள்ள தீர்ப்­பு­களும் கல்­வி­ய­மைச்சின் சுற்று நிரு­பங்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறித்த பாட­சா­லையில் இந்துப் பாரம்­ப­ரி­யங்கள் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­வது மிகவும் வர­வேற்­கத்­தக்­க­தாகும். எனினும் மற்­றொரு சமூ­கத்தின் பாரம்­ப­ரி­யத்தை அது மறு­த­லிக்க முனை­வதே இங்கு பிரச்­சி­னைக்­கு­ரி­ய­தாகும்.

இவ்­வா­றான பிரச்­சி­னைகள் இதன் பிறகும் ஏற்­படக் கூடா­தெனில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்­களம் மத்­திய கல்­வி­ய­மைச்சின் கரி­ச­னை­யுடன் சட்ட அந்­தஸ்­துள்ள விதி­மு­றை­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இந்த விதி­மு­றை­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே புதிய ஆசி­ரியர் நிய­ம­னங்­களும் ஆசி­ரிய இட­மாற்­றங்­களும் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். இல்­லா­த­வி­டத்து இவ்­வா­றான முரண்­பா­டுகள் தொடர்ச்­சி­யாக மேலெ­ழவே செய்யும். இவை  ஆசி­ரி­யர்­களை உள­வியல் ரீதி­யாக பாதிக்கும். இது நிச்சயமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கையில் பாரிய பின்னடைவுகளைக் கொண்டுவரும்.

எனவேதான் எதிர்காலத்தில் இவ்வாறான இன, மத முரண்பாடுகள் அரச கல்வி நிறுவனங்களில் இருந்து தோற்றம் பெறாமலிருப்பதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும். அதற்கு இவ்வாறான தற்காலிக இடமாற்றங்கள் ஒருபோதும் உதவப் போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

(விடிவெள்ளி பத்திரிகை, வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்)

0 கருத்துரைகள்:

Post a Comment