Header Ads



ஜனநாயக ரீதியில், தலைமைத்துவத்தை தெரிவுசெய்ய போராடுவோம்

ஜனநாயக ரீதியில் சிறந்த தலைமைத்துவமொன்றை தெரிவு செய்வதற்கான போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போமென இராஜாங்க அமைச்சர் அஜித்.பி.பெரேரா நேற்று தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் (26) கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கட்சி மறுசீரமைப்புக்கான அரசியல் சபை நேற்று முன்தினம் (25) நியமித்த புதிய பதவிகளை கட்சி செயற்குழு நேற்று அங்கீகரித்ததுடன் சில புதிய பதவிக்கான ஆட்களையும் நியமனம் செய்தது.

ஐக்கிய தேசியக் கட்சியை ஜனநாயகத்தின் பக்கம் கொண்டு செல்ல தற்போதிருக்கும் யாப்பால் முடியாது. புதிய யாப்பு ஒன்றின் மூலமே அதனை செய்ய முடியுமென்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நடைமுறையிலுள்ள கட்சி யாப்புக்கு அமைய இயலுமானவரை போராடி வந்ததாக சுட்டிக்காட்டிய அவர், கட்சியை பாதுகாப்பதற்காக கட்சியின் ஒழுங்கு விதிகளின் எல்லைக்குட்பட்ட வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்ததாகவும் கூறினார்.

தற்போது இருக்கும் எல்லைகள் கவலையளிக்கக்கூடிய அனுபவங்களையே கொண்டிருப்பதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதனை ஏற்றுக் கொள்ளதயாராக இல்லையென்றும் அவர் தெரிவித்தார்.

என்றாலும் ருவன் விஜயவர்தன குழுவின் அறிக்கை கட்சிக்கு சமர்ப்பிக்கப்பட் வேண்டுமென்றும் அதனை கட்சி யாப்பு திருத்தம் ஒன்றின் மூலமே செய்ய முடியுமெனவும் அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.