Header Ads



19 ஆம் திக­தி, "எதி­ர­ணியில் அம­ருவோம்"

பிர­த­ம­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்­து­விட்டு அமைச்­சுப்­ப­த­வி­களை வகிக்க எமக்கு உரிமை  இல்லை. ஆகவே எமது மனச்­சாட்­சிக்கு அமைய தீர்­மானம் எடுத்­துள்ளோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர்  தெரி­வித்­துள்­ளனர். 

அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து எதிர்க்­கட்­சியில் 19 ஆம் திக­தி­ அமரும் எமது தீர்­மா­னத்தில் மாற்றம் இல்லை  எனவும் குறிப்­பிட்­டுள்­ளனர். 

பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்க ஐக்­கிய தேசியக் கட்சி அழுத்தம் கொடுத்து வரும் நிலையில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் ரணில் எதிர்ப்பு அணி­யினர் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து வெளி­யேறும் தீர்­மா­னத்தை எடுத்­துள்­ள­தாகவும் குறிப்­பிட்­டுள்­ளனர். 

இது குறித்து இரா­ஜாங்க அமைச்சர் லக் ஷ்மன் யாப்பா அபே­வர்­தன கூறு­கையில், 

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை இது­வரை கால­மாக ஸ்ரீலங்கா சுதந்­திரக்கட்­சி­யாக நாம் கூறிய கார­ணிகள் மற்றும் ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்ட விசேட குழுவின் அறிக்­கைக்கு அமைய சுட்­டிக்­காட்­டப்­பட்ட கார­ணி­க­ளாகும். மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் விவ­கா­ரத்தில் பிர­தமர் பிர­தான குற்­ற­வாளி என தெரிந்தும் அந்தக் கார­ணி­களை நாம் சுட்­டிக்­காட்­டிய பின்­னரும் பிர­த­ம­ருக்கு எதி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ர­ணையை ஆத­ரிக்­காது செயற்­பட முடி­யாது. 

ஆகவே நாம் ஜனா­தி­ப­தியின் அனு­ம­தி­யுடன் நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ர­ணையை ஆத­ரிக்க தீர்­மானம் எடுத்தோம். இதன் பின்­ன­ணியில்  தான் எமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப்பிரே­ரணை மற்றும் தேசிய அர­சாங்­கத்தில் இருக்கக் கூடாது என்ற அழுத்­தங்கள் எழ ஆரம்­பித்­துள்­ளன. எனினும் இவற்றை முகங்­கொ­டுக்க நாம் தயா­ரா­கவே உள்ளோம். 

பிர­த­ம­ருக்கு எதி­ரான  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஆத­ரித்த பின்னர் எமக்கு அமைச்சுப் பத­வி­களை வகிக்­கவோ, அல்­லது அமைச்­ச­ர­வையில் அங்கம் வகிக்­கவோ தார்­மீகம் இல்லை. ஆகவே நாம் எமது அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து சுயா­தீ­ன­மாக செயற்­பட தீர்­மானம் எடுத்­துள்ளோம். எமது நிலைப்பாட்­டினை நாம் ஜனா­தி­ப­திக்கு எழுத்து மூலம் அறி­வித்­தி­ருந்தோம். பின்னர் நேற்று  கூடிய மத்­திய குழுக் கூட்­டத்தில் எமது நிலைப்­பாட்­டினை தெரி­வித்தோம். எனினும் இறுதி தீர்­மானம் ஒன்று நேற்­றைய கூட்­டத்தில் பெறப்­ப­ட­வில்லை. எவ்­வாறு இருப்­பினும் நாம் அமைச்சுப் பத­வி­களை துறக்க தயா­ராக உள்ளோம். எமது 16 உறுப்­பி­னர்­களும் அமைச்­சுப்­ப­த­வி­களை துறந்து  எதிர்­வரும்  19 ஆம் திக­தி எதிர்க்­கட்­சியில் அமர தீர்­மானம் எடுத்­துள்ளோம். 

நேற்று கூடிய மத்­திய குழுக் கூட்­டத்­திலும் நாம் இதே நிலை­ப்பாட்டில் இருந்தே கருத்­து­களை முன்­வைத்தோம். இன்­றைய( நேற்று )  அமைச்­ச­ரவை கூட்­டத்தை புறக்­க­ணிக்க நாம் தீர்­மானம் எடுத்தோம். அதற்­க­மைய எமது அமைச்­ச­ரவை அமைச்­சர்கள் எவரும் இன்­றைய அமைச்­ச­ரவை கூட்­டத்தில் கலந்­து­கொள்­ள­வில்லை. அடுத்த அமைச்­ச­ரவை கூட்­டத்­திற்கு முன்னர் எமது நிலைப்­பா­டுகள் குறித்து ஆராய்­வ­தாக ஜனா­தி­பதி தெரிவித்துள்ளார். எனினும் எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. எனினும் ஜனாதிபதியை பாதுகாக்கும் கடமை எமக்கு உள்ளது. அதேபோல் இந்த அரசாங்கத்தை பலவீனப்படுத்தவும் நாம் முயற்சிக்கவில்லை. எமது மனச்சாட்சிக்கு அமைய நாம் எதிர் அணியில் அமர்ந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.





Share

No comments

Powered by Blogger.