Header Ads



சிறையில் பாது­காப்­பாக இருக்க, நடித்த கொலையாளி கைது

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட ஹெட்­டி­யா­வத்த- சுமித்­ராராம வீதி, பிலிங் தோட்­டத்தில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி இரவு மேற்­கொள்­ளப்பட்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் இளைஞர் ஒருவர் கொல்­லப்­பட்­ட­துடன் மேலும் இருவர் படுகாய­ம­டைந்த சம்­பவம் தொடர்பில் தேடப்­பட்டு வந்த பிர­தான சந்­தேக நப­ராக கரு­தப்­படும்  தனுக எனப்­படும் தினூஷ சந்­தோஷ் ­கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

பாது­காப்­பாக இருக்க  டாம் வீதி பொலிஸ் நிலை­யத்தின் சார்ஜன்ட், கான்ஸ்­டபிள் ஒரு­வரின் உத­வி­யுடன் சிறு தொகை போதைப்பொருள் குற்­றச்­சாட்டில் சிறை க்கு செல்ல முற்­பட்ட வேளையில் இவ்­வாறு அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­துடன் அவ­ருடன் இருந்த மற்­றொ­ரு­வரும் இது தொடர்பில் கைதா­கி­யுள்ளார். 

கைது செய்­யப்­பட்ட தினூஷ சந் தோஷ் மற்றும் பிர சாத் பதலே ஆகி­யோரை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசா­ரிக்க கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு நேற்று அனு­மதி பெற்­றுக்­கொண்ட நிலையில், அவர்­க­ளுக்கு உதவ முற்­பட்ட டாம் வீதி பொலிஸ்  சார்ஜன்ட் ஒரு­வரும் கான்ஸ்­டபிள் ஒரு­வரும் பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

சந்­தேக நபர்­களில் பிரசாத் பதலே 560 மில்­லி­கிராம் ஹெரோ­யி­னு­டனும், தினூஷ சந்தோஷ் 600 மில்லி கிராம் ஹெரோ­யி­னு­டனும் குறித்த சார்ஜன்ட், கான்ஸ்­ட­பி­ளிடம் சென்று  வேண்­டு­மென்றே திட்­டப்­படி சிக்­கிக்­கொண்­டுள்­ள­துடன், அது தொடர்பில் அவர்­களை விளக்­க­ம­றியலில் வைக்க நீதி­மன்றை கோரி உதவி  செய்ய அவ்­வி­ரு­வரும் திட்­ட­மிட்­டுள்­ளனர்.  

இந் நிலை­யி­லேயே கைதின் பின்னர் சந்­தேக நபர்­களை கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவு பொறுப்­பேற்ற நிலையில், உதவ முற்­பட்ட இரு பொலி­ஸா­ரையும் கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பணி இடை நிறுத்தம் செய்­துள்ளார். 

கொட்­டாஞ்­சேனை துப்­பாக்கிச் சூட்டு சம்­ப­வத்தில் 29 வயதுடைய மிலான் மதுசங்க என்பவர் உயிரிழந்ததுடன்  34 மற்றும் 61 வயதுகளை உடைய சமந்த பிரதீப், ஜீ.பி.குமாரதாஸ ஆகியோர் படுகாயமடைந்தனர்.

No comments

Powered by Blogger.