Header Ads



தேர்தல் நடைபெற்று ஒரு மாதத்தில் நாம், கண்டி வன்முறையை எதிர்நோக்க நேரிட்டது - ரணில்

அரசியல் என்பது இரண்டு, மூன்று அணிகளின் போட்டியல்ல என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கேகாலை, தமுனுபொல ஸ்ரீ ஆனந்தராம விகாரையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டு மக்களுக்கு எப்படி சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எப்படி முன்னேறுவது என்பது குறித்தே அனைவரும் சிந்திக்கின்றனர். எமது தவறுகளை திருத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

தேர்தல் ஒன்று நடைபெற்று முடிந்து ஒரு மாதத்தில் நாம் கண்டி வன்முறையை எதிர்நோக்க நேரிட்டது. இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும்.

சிங்கள புத்தாண்டு நேரத்தில் நாட்டு மக்களுக்கு தேவையான பொருட்கள் போதுமானதாக இருக்க வேண்டும். மக்களின் கைகளில் பணம் இருக்க வேண்டும்.

புத்தாண்டுக்கு பின்னர் முதலீட்டாளர்களை கொண்டு வந்த பின் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

தொழிற்சாலைகள், ஹோட்டல், துறைமுகம், விமான நிலையம் ஆகிய தொழில் துறைகளில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டங்கள் வெற்றியளிக்கும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அதன் பலன்களை அனுபவிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. இந்த பைத்தியக்கார துவேஷ நாயின் செய்தியை தவிர்த்தாலும் நல்லது எல்லாம் செய்து விட்டு இப்ப நானில்லை கதை.

    ReplyDelete
  2. Mr.Clean,
    Which new year??????? 202.....????

    ReplyDelete
  3. வன்முறையே அரசாங்கத்தின் திட்டம் தானே. நமக்கு தெரியாது என்று நினைகின்றது நரி.

    ReplyDelete
  4. YOUR ARE THE AGENT OF MOSAAD
    OUR MUSLIMS ALWAYS VOTING UNP UNP
    ONLY.

    ReplyDelete
  5. நம்பிக்கை -வாக்கெடுப்பு - வந்தபோது பயங்கரவாத தாக்குதலும் -
    கூடவே வந்தது , இந்த பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீண்டும் வரும் , முஸ்லீம் மந்திரி மார் என்ன முடிவெடுக்க போகிறார்கள் , இவளவு தெளிவாக விளங்கியும் , பிரதமரை மாற்றாவிட்டால், முஸ்லீம் கள் - முஸ்லீம் அரசியல் வியாபாரிகளை மாற்றுவார்கள் -நினைவில் வையுங்கள் -- மாகாணசபை தேர்தல் முன்னால்..............................................

    ReplyDelete
  6. All the ruling and opposition political parties are still of the view that all Sri Lankans are nothing but idiot Buffalos.It is very unfortunate that the Feb 10 election results proved crystal clear that the way this govt. is marching towards is incorrect and nothing but misleading the countrymen. Again this so called racial violence is nothing but govt. orchestrated disaster aimed at properties and religious places.What happened to the one million jobs for Sri Lankans. Thousands university graduates are on the roads. No national policy no strategical plans for the country. Now started to sell off the govt. properties to private entities, blaming Rishad Badurdeen for encroaching the animal sanctuaries,sold 4000 and 5000 acres of govt. lands to USA companies for banana plantation in Nuwareliya to cater to the westerners requirements.These people get up every morning to sell here or somewhere the govt. or public owned lands and estates to the west to pocket the money into their own basket. Shame to the politicians, suffer to the masses and innocent Sri Lankans.

    ReplyDelete

Powered by Blogger.