March 31, 2018

தவறுகளுக்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட ரணில்

நல்லாட்சி அரசில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொண்டு உறுதியான பயணத்தை முன்னெடுத்துச் செல்ல தான் உறுதிபூண்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளிடம் உறுதியளித்திருக்கிறார். தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசு மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடினர்.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லா ப் பிரேரணை குறித்தும், சிறுபான்மை மக்களின் மனநிலை தொடர்பாக கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமாகக் காணப்பட்டது.

இந்தச் சந்திப்பில் பங்காளிக் கட்சிகள் சார்பில் அமைச்சர்கள் மனோ கணேசன், பாட்டலி சம்பிக்க ரணவக்க, டாக்டர் ராஜித சேனாரத்ன, பழனி திகாம்பரம் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கட்சி செயலாளர் கபீர் ஹாஷிம், கட்சி உயர்மட்டத்தைச் சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். 

பேச்சுக்களை ஆரம்பித்து அமைச்சர்கள் மனோ கணேசனும், பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் சிறுபான்மை சமூகங்களும், பங்காளிக் கட்சிகளும் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படையாகவே சுட்டிக் காட்டியதோடு இதனை வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவளித்து அரசின் பயணத்தை சீர்குலைக்கப் போவதில்லை என உறுதி படத் தெரிவித்தனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிச்சமாக தோற்கடிப்போம் என பங்காளிக் கட்சிகள் பிரதமரிடம் உறுதியளித்துள்ளன.

நல்லாட்சிப் பயணத்தில் கடந்த மூன்றாண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடியதாக எதுவும் இடம்பெறவில்லை. மஹிந்த ஆட்சியில் போன்றே இந்த ஆட்சியிலும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் உணர்கின்றனர் என அமைச்சர் மனோகணேசன் பிரதமரிடம் காட்டமாக எடுத்துரைத்திருக்கிறார்.

பங்காளிக் கட்சிகள் கூட ஏமாற்றப்பட்டுள்ளனர். நாம் எடுத்துக் கூறிய பல விடயங்களையும் அரசு உதாசீனப்படுத்தும் விதத்திலேயே நடந்து கொண்டது. இந்தத் துரோகத்துக்காக நாம் பழிதீர்த்துக் கொள்ள துரோகமிழைக்க மாட்டோம்.

நிச்சயமாக உங்களை காப்பாற்றுவோம். இனியாவது அரசின் பயணப் பாதையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுமார் இரண்டு மணி நேரமாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது தவறுகள் இடம்பெற்றிருப்பதை பிரதமர் ஏற்றுக் கொண்டதோடு அவற்றைச் சீர் செய்ய உடனடியாக மாற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அத்துடன் எதிர்வரும் 5ம் திகதி முதல் பயணப்பாதை திசை திருப்பப்படும் என உத்தரவாதமளித்துள்ளார். ஆலோசனை குழுக்கள் வேண்டாம் செயற்பாடுகளே முக்கியம், பங்காளிக் கட்சிகளுடன் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டியதே முக்கியமென பங்காளிக்கட்சிகள் சுட்டிக் காட்டியதை பிரதமர் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார். தவறுகளுக்கான முழுப் பொறுப்பையும் பிரதமர் இங்கு ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

எம்.ஏ.எம். நிலாம் 

6 கருத்துரைகள்:

He has no other choice other than apologizing. but these leaders have never learned the lessons and corrected to uplift the country.

சந்தர்ப்பவாதிகள் எல்லா சந்தர்ப்பத்திலும் கூறுவது போன்றது தற்போதும் கூறுகின்றார்கள்.இவர் கூறுவதை பார்த்தால் ஐந்தாம் திகதி தமிழ் மக்களுக்கு வடகிழக்கு ஒன்றிணைந்த சமஸ்ரி ஆட்சி முறை.ஆறாம் திகதி முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு தனி முஸ்லிம் அலகு,மற்றும் கண்டி பிரச்சினையில் கைதானவர்களுக்கு எலாம் திகதி மரண தண்டனை தீர்ப்பு.நடக்கும் போல் தெரிகிறது.அறுபது வருடமாக ஏமாற்றப்படும் இந்த இரண்டுசிறுபான்மையின் பிரச்சினை இந்த ஆறு நாளில் தீர்த்தி வைக்கப்போரார்கள்.எல்லாம் இந்த சிறுபான்மை இளிச்ச வாயங்கள் இருக்கும் வரை இவர்கள் புத்தி சாலிகள்.

Dear PM, you failed to implement your election manifest when u came to power. You didnt fulfill the promises you gave to the mass. The Very first impression upon assuming office you failed was not prosecuted the guy who had 2 passports at the Airport. You tried to play double game. You had a personal meeting in the parliament complex which shrouded a secret deal to believe. You should have brought to justice the rogues who betrayed the govt funding by appointing SF but it came too late for the Executive overturn your proposal. You were lenient and not enforced the law of the soil though you had the power. You too responsible for appointing non Sri Lankan to lead the CB which he fraudstered a large amount of money. You have to bear the responsibility for drying our reserve because you were incharge. You were the Minister Incharge for law and order when the mobs attacked muslims in the upcountry. People of Muslim belief has lost confidence on you for betraying and I dont think that infuture UNP will secure any seats in muslim dominated electorates. The image of the party has been spoiled. These are lessons you have to learn and it didnt surprise me why SLMC didnt joined the meeting that you convened. I feel sorry for you for facing NCM. All this happened because you failed to apply your power. I hope and pray you will overcome the NCM. Best of Luck!!!!

It is no use blaming PM,he too under attack of Maithree who wants to expel PM,UNP and Muslims because it is this power defeated his boss Mahinda.His candidacy is conspiracy and he is not common candidate.He deceived all the parties who supported for his victory.So he is most dangerous man having close relationship with BBS,Rawana Balaya and and mahasen balakaya.It is now SLFP is in power not UNP.So all the minorities must back UNP and defeat this conspirators.

இவர் எப்படித்தான் முடிவெடுத்தாலும், அதைத்தடை விதிக்க ஆலோசக சாதுவை தன்பக்கம் வைத்திருக்கும் அதிகாரம் பொறுந்தியவர் விடமாட்டார். கொலைகாரனைப்பிடிக்க கொலைகாரனின் அம்மாவிடம் சென்று வெற்றிலை பார்க்கச்சென்ற கதையாக இலங்கைத்திரு நாட்டின் சிறுபான்மை மக்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். இரண்டு பக்கமும் எதிரி. எந்த எதிரியிடம் குறைந்த தாக்கம் அல்லது சிறிய அழிவு கிடைக்கும் என்று தேட வேண்டிய காலம். எவன் ஆக்ககூடிய நலவு செயவான் என்பது மாயமாகி, ஆகக் குறைந்த அழிவு எவனிடம் கிடைக்கும் என்று தேடும் காலம்.

உன்னை நம்புவதுமில்லை நம்பப்போவதுமில்லை இனிமேல் .நீ வீட்டுக்கு சென்று நல்ல ஓய்வெடுத்து கொள்ளும்

Post a Comment