Header Ads



நல்லாட்சியில் 160 வன்முறைச் சம்பவங்கள் - பிரதானமானது ஜின்தோட்டை கலவரம் என்கிறார் மஹிந்த

இந்த நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 160 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றுள் மிகப்பிரதானமானது ஜின்தோட்டை கலவரம், அடுத்து அம்பாறை மற்றும் கண்டி கலவரங்கள் இருக்கின்றன என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற தொடர் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்தும் கருததுத் தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவரிடத்திலும் உள்ளது.

நேற்றைய தினம் முஸ்லிம் தலைவர்கள் சிலர் என்னை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர், மக்களிடம் இந்த விடயங்கள் தொடரபில் எடுத்துக்கூறும்படி என்னிடம் அவர்கள் கேட்டிருந்தார்கள்.

நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த நிலையை கட்டுப்படுத்த அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

அத்துடன், இந்த கலவரங்களில் உயிரிழந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம் என குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது, தாங்கள் ஆட்சியில் இருந்த போது இடம்பெற்ற அலுத்கம கலவரம் போல ஏன் இதைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி பதிலளிக்கையில்,

அலுத்கம சம்பவம் இடம்பெற்றபோது நான் நாட்டிலிருக்கவி்ல்லை, எனினும் நாட்டிற்கு திரும்பியதும் உடனே விரைந்து நான் களுத்துரைக்குச் சென்ற கலவரத்தினை நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. You criticise the governtment at this time for your political gain... stop this game ... We Muslim do not trust you or current one but we believe and keep our trust in Allah...who created you me and all.

    ReplyDelete
  2. MR. Almighty Allah is a biggest conspires then you,wait an see.

    ReplyDelete

Powered by Blogger.