Header Ads



பரபரப்­பான சூழலில், கூடவுள்ள பாராளுமன்றம்

பிர­தமர் பதவி நீக்கம், தனி­யாட்சி போன்ற அர­சியல் பரபரப்­பான சூழலில் நாளை திங்­கட்­கி­ழமை பாரா­ளு­மன்றம் கூடு­கின்­றது. 

இதன்­போது பிர­தான அர­சியல் கட்­சிகள் தமது பெரும்­பான்மைப் பலத்தை நிரூபிக்கக் கூடிய வாய்ப்­புகள் அதி­க­மாக உள்­ளன. சில வேளை­களில் கட்சி தாவல்கள் இடம்­பெறக் கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இதன்­கா­ர­ண­மாக சர்ச்­சை­யான நிலைமை நாளை பாரா­ளு­மன்­றத்தில் ஏற்­படக் கூடிய சாத்­தியம் உள்­ளது.

மேலும் மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்­பான விவாதம் எதிர்­வரும் 20 மற்றும் 21 ஆம் திக­தி­களில் இடம்­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் பெறு­பே­றுகள் வெளி­வந்த பின்னர் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரு­பி­ர­தான கட்­சி­களும் பிள­வ­டைந்­துள்­ளன. இதனால் கடந்த வாரம் முழு­வதும் அர­சியல் ரீதி­யாக நாடு பரப்­ப­ரப்­பாக இயங்­கி­யமை காண முடிந்­தது.

இதன்­படி ஐக்­கிய தேசியக் கட்சி ஆரம்­பத்தில் தனி ஆட்சி அமைப்­ப­தாகக் கூறி விட்டு பின்னர் தேசிய அர­சாங்­கத்­துடன் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­ப­தாக அறி­வித்­தது. அத­னை­ய­டுத்து தற்­போது கூட்டு எதிர்க்­கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தனித்து ஆட்சி அமைக்­க­வுள்­ள­தாக கூறி வரு­கின்­றது.

அத்­துடன் பிர­தமர் பத­வி­யிலும் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஐக்­கிய தேசியக் கட்­சி­யி­னரே பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து  வில­கு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு அழுத்தம் பிர­யோ­கித்த போதிலும் தற்­போது நான் பிர­தமர் பத­வியில் இருந்து விலக மாட்டேன் என ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறி­யுள்ளார். அத்­துடன் சஜித் பிரே­ம­தா­ஸவும் கரு ஜய­சூ­ரி­யவும் பிர­தமர் பதவி பொறுப்­பினை ஏற்க மறுப்பு தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வாறு அர­சியல் ரீதி­யாக பரப்­ப­ரப்­பான சூழல் ஏற்பட்டுள்ள தருவாயில் நாளை திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் கூடும் முதலாவது பாராளுமன்ற அமர்வாக இதனை கருத முடியும்.

1 comment:

  1. (நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய்.”
    (அல்குர்ஆன் : 3:26)

    ReplyDelete

Powered by Blogger.