Header Ads



ரணிலை நீக்குவது குறித்து சட்டமா அதிபரிடம், மைத்திரி ஆலோசனை கேட்கவில்லை

மைத்திரிபால சிறிசேன தமது ஆலோசனையைக் கோரவில்லை என்று சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து நீக்குவதற்கு வாய்ப்புள்ளதா என்று, சட்டமாஅதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாக, தம்மிடம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்தார் என்று, கூட்டு எதிரணியினர் நேற்றுமுன்தினம் கூறியிருந்தனர்.

எனினும், சிறிலங்கா அதிபர் இன்னமும் தம்மைத் தொடர்பு கொண்டு எந்த ஆலோசனையையும் கோரவில்லை என, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பாக என்னுடன் தொடர்பு கொண்டு ஆலோசனை கோரினால், பிரதமரைப் பதவி நீக்கம் செய்வதற்கான சூழ்நிலைகள், வாய்ப்புகள் பற்றி ஆராயப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.