Header Ads



தேசியப் பட்டியலை, ஹக்கீமே தீர்மானிப்பார் - நிஸாம் காரியப்பர்

வெற்றிடமாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நியமனம் தொடர்பான பொறுப்பு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எச்.எம். சல்மான் குறித்த பதவியிலிருந்து கடந்த வியாழக்கிழமை விலகியிருந்தார்.

2016 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் பதவியேற்றார்.

இதையடுத்து, மற்றுமொரு உறுப்பினருக்கு வாய்ப்பை வழங்கும் வகையில், எம்.எச்.எம். சல்மான் தமது உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், குறித்த வெற்றிடத்துக்கான புதிய உறுப்பினரின் நியமனம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பொதுச் செயலாளரிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர்

இந்த விடயம் தொடர்பில் முடிவெடுக்கும் பொறுப்பு கட்சித் தலைவரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

கட்சித் தலைவர்தான் இந்த விடயம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வார் என பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.