Header Ads



தடையை மீறி, இலங்கைக்கு உதவிய பாகிஸ்தான்


நாட்டில் நிலவிவரும் உர தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் பாகிஸ்தானிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்துடன் கப்பல் நேற்றிரவு இலங்கை வந்திருப்பதாக அரசாங்கம் தெரிவித்தது.

கப்பல் மூலம் கொண்டுவரப்பட்ட இந்த உரம் 200 லொறிகள் மூலம் அந்தந்தப் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர்களான அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் தெரிவித்தனர்.

முதற் கட்டமாக 32 ஆயிரம் மெற்றிக் தொன் உரம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதுடன், இரண்டாம் கட்டமாக நேற்று 40 ஆயிரம் மெற்றிக் தொன் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர்.

பாகிஸ்தானில் உர ஏற்றுமதிக்கு தடை காணப்படுகின்றமை மற்றும் உர இறக்குமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கேள்விப் பத்திரங்கள் உரிய விடயங்களை பூர்த்திசெய்யாமை போன்றவையே நாட்டில் உரத் தட்டுப்பாடு ஏற்படக் காரணமாக அமைந்தது என்றும் தெரிவித்தனர். "பாகிஸ்தானிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் உரத்துடன் (நேற்று) இரவு கப்பலொன்று இலங்கை வருகிறது. இந்தக் கப்பலில் உள்ள உரத்தை நேரடியாக 200 லொறிகளில் ஏற்றி தேவையான பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றார்.

பாகிஸ்தானிலிருந்து உரத்தை ஏற்றுமதி செய்ய அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தபோதும் ஜனாதிபதி கலந்துரையாடியதற்கு இணங்க இத்தடையை தளர்த்தி உரத்தை இலங்கைக்கு கொண்டுவர முடிந்துள்ளது. அதேநேரம், உரத்தை இறக்குமதி செய்வதற்கு தனியாருக்கு 100 வீத சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், உர இறக்குமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு கேள்விப் பத்திரங்கள் உரிய விடயங்களை பூர்த்தி செய்திருக்கவில்லை. இதனால் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. இவ்வாறான காரணங்களாலேயே உரத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை நிவர்த்தி செய்ய தற்பொழுது நடவடிக்கை எடுத்துள்ளோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், பாகிஸ்தானிலிருந்து முதல் தொகுதியாக 32 ஆயிரம் தொன் உரம் ஏற்கனவே நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

மகேஸ்வரன் பிரசாத் 

4 comments:

  1. பாகிஸ்தானில் இருந்து பசளையா? எங்கே இந்த புத்த நாட்டின் பாதுகாவலர்கள் BBS, RB, Sinsha le ...... இவர்களது Approval பெறப்பட்டதா.

    இவனுகளுக்கெல்லாம் ரோசம்னு ஒன்று இருந்தா அவங்கட உடுமானத்த கழட்டிட்டு குப்புற படுக்கனும்.

    ReplyDelete
  2. அரசன் அன்றருப்பான் தெய்வம் நின்றறுக்கும் என்பார் போல் ஹலாலு க்கெதிரான போரில் அன்று BBS வெண்றதாக சொன்னார்கள். ஆனால் இன்று அந்த ஷரீஆ சட்டம் அமுலில் இருக்கும் ஒரு நாட்டில் இருந்தே பயளையை தருவித்திருக்கிறார்கள் என்றால் الله أكبر. I think this is just a begining.

    ReplyDelete
  3. Idhukku thambiya nallam.ungalukku pichcha ketka mattum ambaya nallam.

    ReplyDelete
  4. We have also helped Pakistanis in the past, this shows the friendliness of both the countries is very strong.

    ReplyDelete

Powered by Blogger.