Header Ads



அமெரிக்க தூதரகத்தை நோக்கி சென்ற, SLTJ பொலிசாரினால் இடைமறிப்பு (படங்கள்)


ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலை நகராக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையும் அமெரிக்க அரசையும் கண்டித்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்பாட்டம் இன்று (12.12.2017) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்றது.

பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராகவும் நடைபெற்ற இந்நிகழ்வில், அமெரிக்க தூதரகத்தை நோக்கி செல்ல முற்பட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினரை பொலிசார் தூதரகத்தை நோக்கி செல்ல விடாமல் இடை மரித்தார்கள்.

காலி முகத்திடல் சுற்று வட்டத்திற்கு முன்னால் ஆர்பாட்டம நடைபெற்ற நேரத்தில் அமைப்பின் செயலாளர் சகோ. ஹிஷாம் MISc மற்றும் நிர்வாகிகளை பொலிசார் தமது வாகனத்தில் அமெரிக்க தூதரகத்திற்கு அழைத்து சென்றார்கள். அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் இலங்கை முஸ்லிம்களின் கண்டனத்தை பதிவு செய்யும் விதமான மகஜரை ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஒப்படைத்தார்கள்.

பின்னர் நடைபெற்ற கண்டன உரையில் தமிழ் மொழியில் அமைப்பின் தலைவர் சகோ. ரஸ்மின் MISc அவர்களும் அமைப்பின் பேச்சாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் சிங்கள மொழியிலும் உரையாற்றினார்கள்.

ஜெரூஸலத்தை அபகரித்து இஸ்ரேலுக்கு கொடுக்கும் அமெரிக்காவின் கபடத் தனம் கொண்ட திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் அரபு நாடுகளும் சர்வதேச நாடுகளும் அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு எதிராக திரல வேண்டும் என்றும் கண்டன உரையில் வலியுறுத்தப்பட்டதுடன், அரபு நாடுகள் அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவுகளை முற்றாக துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ







16 comments:

  1. They should do it in front of Saudi embassy which has been supporting Isreal for a long time ?
    Why this double standard?
    Saudi has done more damage to Muslim world than Americans .
    Why they do not speak about it

    ReplyDelete
    Replies
    1. @Ateek Abu why do u say they should do it , other should it ,
      Why don't u and your group do it ? Then call others to join to protest in front of Saudi.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Chandrabal do not publish racism against innocent people

      Delete
  3. Alhamdulla allahuakbar எங்கப்பா 21 மானங்கெட்ட பச்சோந்திகள் நொல்லாட்சிச்சீசீசீ க்கு கூஜா தூக்கும் இனத்துரோகிகளையும் மக்கள் அணைவரும் உண்மையைக் அறிந்துகொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. So USA has agreed to withdraw Its statement about Jerusalem as Israel's capital after the rally in galle face

    ReplyDelete
  5. Inshaallah alhamdulla allahuakbar

    ReplyDelete
  6. Sltj என்று ஒரு பெனர் எதுக்கு எல்லோரும் தூக்கி நிற்கிறார்கள்? அது காட்டத்தான் முழு ஏற்பாடுகள்? ???

    ReplyDelete
  7. முஸ்லிம் நாடுகளில் நடக்கும் இந்த உள்ளூர் போராட்டங்கள் எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு தான்,

    70 வருடங்முகளுக்கு முன்னர், இஸ்ரேல் எனும் நாடு UK யால் உருவாக்க பட்ட போதும், இதை விட பெரிய போராட்டங்கள் வெடித்தன. உடனடியாக சவுதி- எகிப்து தலைமையில் பல முஸ்லிம் நாடுகள் கூட்டாக, இஸ்ரேல் மீது பல முனைகளில் இருந்து ஜீகாத் போர் நடாத்தினார்கள். (6 நாளில் இஸ்ரேல் போரை முடித்து, தமது நிலப்பரப்பை இரட்டிப்பாக்கி விட்டார்கள்). பின்னர் படிபடியாக பல முஸ்லிம் நாடுகள் இஸ்ரேலை அங்கிகரித்தன, சவுதி உட்பட.

    இதே போல், விரைவில், ஜெருசலமையும் இஸ்ரேல் தலைநகராக பல முஸ்லிம் நாடுகளே ஏற்று கொண்டு விடுவார்கள்.

    இஸ்ரேலும் அங்கு தற்பொது வசிக்கும் பலஸதீனகள் அனைவரையும் விரட்டி விட்டு, ஜெருசலமயை 100% இஸ்ரேலியர்களாக மாற்றி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. At Ajan may be in their dreams. But deifnetely Muslims will
      Have the final victory.

      Delete
    2. @VoiceSL, is it?, ok.. Good luck

      Delete
  8. MOHAMED LAREEF அவர்களே! கேடு கெட்ட சிலர் இருக்கும் வரை முஸ்லிம்கள் விமோசனம் பெற முடியாது உங்களின் பொறாமையை திருத்திகொள்ளவும் இல்லை என்றால் நீரும் அந்த கேடுகெட்டவனாவீர்

    ReplyDelete
  9. It is merely a publicity activity for SLTJ. Why don't they do it under the banner of Muslim community rather than identifying them as SLTJ. We are all interested in self pride and publicity. It does not exhibit any pure intention. You must try to focus on the unity of our muslim community if you want to gain any benefit from these kind of activities. SLTJ has been a cause for the disunity of the muslim community. That is really alarming.

    ReplyDelete
  10. Why more SLTJ banners. As usual using this situation for Brand marketing. 😀

    ReplyDelete
  11. தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளில் சிலவற்றுக்குப் பதில்

    எண்ணிக்கையை வைத்து ஒரு விடயத்தை அணுகுவது இஸ்லாத்தில் இல்லாத நடைமுறை என்பதை நீங்கள் புரிந்தகொள்ள வேன்டும். அநாதரவான நிலமையிலேயே இஸ்லாம் தனது பயணத்தை -அனைத்து அநியாயங்களுக்கும் எதிராக ஆரம்பித்தது என்பது உங்களுக்குத் தெரியாததா ???

    உலகத்தில் அழிக்கப்பட்ட சமூகங்களின் வரலாறு எவ்வாறு நடந்துள்ளது என்பதை நீங்கள் அறியவில்லையா ??? ஒரு சமூகம் அநியாயம் செய்யும்போது அந்த சமூகம் மாத்திரம் அழிக்கப்படவில்லை - மாற்றமாக அந்த அநியாயம் நடக்கும்போது எவர்கள் அதனைப் பார்த்துக்கொன்டு மௌனமாக இருந்தார்களோ அவர்களையும் சேர்த்துத்தான் அல்லாஹ் அழித்துள்ளான் - என்ற வரலாறு உங்களுக்கத் தெரியாதா ???

    நீங்கள் வேன்டுமானால் அப்படிப்பட்வர்களாக இருந்துவிட்டுப் போங்கள் - தயவுசெய்து அநியாயங்களை எதிர்ப்பவர்களை வசைபாடி அல்லாஹ்வின் சாபத்தை இன்னும் அதிகரித்துக்கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
  12. Breaking News
    வெள்ளை மாளிகையின் அவசர அறிக்கை
    👆👆👆👆👆👆👆👆
    கொழும்பில் அமெரிக்க தூதரகத்துக்கு சற்று தூரமாக நடாத்தப்பட்ட முன்னூறு பேர் கூட பங்குபற்றாத முற்றுகையிடப்படாத முற்றுகை (?) ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு செய்துள்ளது.
    அமெரிக்க அதிபரின் இவ்வறிக்கையில் குறிப்பிடப்
    பட்டுள்ளதாவது:
    ஏற்கனவே ஆசிய கண்டத்தில் வட கொரியாவுடன் அமெரிக்கா முரண்பட்டுள்ள நிலையில் இன்னுமொரு ஆசிய நாட்டுடன் தாம் முரண்பட விரும்பவில்லை எனவும், எனவே அப்படி ஒரு நிலைமை தோன்றாதிருக்க SLTJ அமைப்பு அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்றும்,அதற்காக அமெரிக்கா சில விட்டுக்கொடுப்புகளை செய்ய காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் இலங்கையில் ரங்கல வில் IIRO நிறுவனம் கட்டிய பள்ளிவாசல், பண்டாரவளையில் IIRO நிறுவனம் கட்டிய பள்ளிவாசல், பேருவளை மஹகொடவில் JASM கட்டிய பள்ளிவாசல் மற்றும் மாவத்தகமை தல்கஸ்பிட்டியில் தர்ஜுமாவுக்காக பணம் தந்த அதே அரபியின் பணத்தால் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகியவற்றை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ள SLTJ அவற்றை கைவிட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் தாமும் மஸ்ஜித் அக்ஸாவின் ஆக்கிரமிப்பு விடயத்தில் சாதகமான முடிவுகளை எடுக்க தயாராய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    அத்தோடு அமெரிக்க அதிபர்
    தான் முஸ்லிம்கள் என்று ஏற்றுக் கொண்டுள்ள பல கோடி முஸ்லிம்களை முஸ்ரிக் என்று தீர்ப்பு கொடுத்துள்ள இயக்கம் பாலஸ்தீனிய விடயத்தில் போடும் இரட்டை வேடம் தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக தாம் SLTJ தலைவர் திருவாளர் குதுபுல் அக்தாப் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயாராய் இருப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக SLTJ யிடம் வினவிய போது, அமெரிக்க அதிபருடன் தாம் பேச்சுவார்த்தை நடாத்துவதை விடவும் விவாதம் நடாத்தவே விரும்புவதாகவும் அதற்காக அரண்மனைக்காரன் தெரு அதிபர் அண்ணன் பீஜே யின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் அண்ணனின் ஸ்பீடு அறிக்கை வந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து
    ஆலோசிக்கவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

    படித்த்ததில் பிடித்தது

    ReplyDelete

Powered by Blogger.