Header Ads



டிரம்பின் தீர்மானத்தை ஐ.நா.வில் நிராகரித்த இலங்கை


அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அல்-குத்ஸ் (ஜெருசலம்) ஐ இஸ்ரேலின் தலை நகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீர்மானத்தை நிராகரித்து ஐ நா பொதுச் சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திகு ஆதரவாக இலங்கை அரசும் வாக்களித்தது!

இலங்கை அரசிற்கும் மக்களிற்கும் முஸ்லிம் சமூகம் நன்றி கூறுகிறது!

அல்-குத்ஸ் (ஜெருசலம்) ஐ இஸ்ரேலின் தலை நகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தீர்மானத்தை நிராகரித்து ஐ நா பொதுச் சபையில் நேற்று கொண்டுவரப்பட்ட தீர்மானத்திகு ஆதரவாக 128 நாடுகள் வாக்களித்து நீதிக்கும் அநீதிக்கும் சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் எதிரான போரில் உலகம் தெளிவானதொரு நிலைப்பாட்டை எடுத்துள்ளமை முஸ்லிம் உலகு அடைந்த ஒரு இராஜ தந்திர வெற்றியாகும், எதிராக 9 நாடுகள் வாக்களித்துள்ளன, அமெரிக உதவிகள் நிறுத்தப் படும் என்ற டொனால்ட் டிரம்பின் இறுதி நேர அச்சுறுத்தலுக்கு மத்தியில் சில 35 நாடுகள் வாக்களிப்பில் இருந்து தவிர்ந்து கொண்டன.

டொனால்ட் டிரம்பின் முட்டாள்தனமான தீர்மானம் அமெரிக்காவை சரவதேச அரங்கில் தனிமைப் படுத்தியுள்ளதோடு அவரது நிர்வாகத்திற்கு கிடைத்த பலத்த அரசியல் இராஜதந்திர தோல்வியாகவும் கருதப்படுகின்றது. அதேவேளை இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பிற்கும், சட்ட விரோத குடியிருப்புகளிற்கும், அக்கிரமங்களிற்கும் எதிராக சரவதேச சமூகம் உறுதியான தனது நிலைப்பாட்டை முன்வைத்து இஸ்ரவேலிற்கு தகுந்த பாடம் ஒன்றை படிப்பித்துள்ளது.

அதேவேளை, மத்திய கிழக்கில் மற்றும் வளை குடா நாடுகளில் இஸ்ரவேலினதும் அமெரிக்காவினதும் ஏவலாளிகளாக நயவஞ்சகர்களாக தொழிற்பட்டு ஹமாஸ் மற்றும் பதாஹ் தலைமைகளிற்கு முறைகேடான அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த சகதிகளது இரகசிய நிகழ்ச்சி நிரல்களும் சரவதேச அரங்கில் தோல்வி கண்டுள்ளன.

அமெரிக்கா அதிபர் சியோனிஸ்டுகளுடன் இனைந்து முன்னெடுக்க எத்தனிக்கும் நவீன சிலுவைப் போர் அமெரிக்க மக்களாலும் கிறிஸ்தவர் மற்றும் யூதர்களாலுமே நிராகரிக்கப் படுவதற்கான காலம் வெகு தூரமில்லை.
பாலஸ்தீன் இஸ்லாத்தினதும் அருளப்பட்ட வேதங்களினதும் தாயக பூமியாக மிளிரும் என்ற விசுவாசம் பிரபஞ்ச நியதிகள் சார்ந்த உண்மையாகும். அசத்தியம் அழிந்தே தீரும்!

Inamullah Masihudeen 

7 comments:

  1. Word united for justice and some thugs can't realise it yet.

    ReplyDelete
  2. இலங்கை ஒரு சறிய நாடாயினும் அடிமை நாடுபோல் நடந்திடாமல்,பிச்சை இடமாட்டோமெண்ற மிரட்டலக்கும் அடிபணிந்திடாமல் ஆண்மயுடன் சுய கௌரவத்துடன் முடிவெடுத்தமைக்கு.

    ReplyDelete
  3. Congratulations ! To the government for standing up for what is right.!

    ReplyDelete
  4. But Sri Lanka Salafi groups would not be happy..Saudi may have supported US ..
    Or abstained from voting

    ReplyDelete
    Replies
    1. We are against ur siya groups

      Delete
    2. அபூ! உங்களது பதிவுகள் பிளவுகளை உரமிட்டு போசிப்பதாகவே அமைந்துள்ளது. உலக இலாபங்களை மட்டும் கருத்தில் கொண்டு இவ்வாறான பதிவுகளை இடுவீர்களாயின் அதன் கனதி சொல்லிமாழாது. எனவே எண்ணத்தையும் எழுத்தையும் மீள்வாசிப்புக்குட்படுத்துவது நலமாக அமையும் என்பது இவ் அடியானின் ஆவலாகும்.

      Delete
    3. Atteeq Abu என்பவர் ஷீயாக்களால் நன்கு பயிற்றுவிக்கப்பட்டு தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்துவதற்கென்றே உருவாக்கம்பட்டவர்.

      Delete

Powered by Blogger.