November 18, 2017

இலங்கையில், ஐக்கிய அரபு இராச்சிய அமைச்சர்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிவிவகார அமைச்சர் சேக் அப்துல்லா பின் அல்நயன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். அல்நயன் ஐக்கிய அரபு இராச்சிய அரச குடும்பத்தின் ஓர் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் ரக விசேட விமானமொன்றின் ஊடாக அல்நயன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அல்நயனுடன் மேலும் 30 பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment