October 23, 2017

IS தீவிரவாதிகளுடன், இலங்கை மருத்துவர்கள்..?

ஐஎஸ் எனப்படும் தீவிரவாதிகளுடன் இணைந்து சிறிலங்காவைச் சேர்ந்த மருத்துவர்களும் பணியாற்றுவதாக, ஐஎஸ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள காணொளி ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.

ஐஎஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் பற்றிய சுமார் 15 நிமிடக் காணொளி ஒன்று அந்த அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் காணொளியில் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவரான, அபு அல் முகாதில் என்பவர், ஐ.எஸ் அமைப்பின் மருத்துவ வசதிகள் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.

ரக்காவில் உள்ள ஐஎஸ் அமைப்பில் மருத்துவ நிலையத்தில் மிக நவீன வசதிகள் இருப்பதை இந்தக் காணொளி வெளிப்படுத்தியுள்ளது.

இங்கு இந்திய மருத்துவர் பணியாற்றுவதாக சந்தேகிக்கப்படுகிறது.

சிறிலங்கா, அவுஸ்ரேலியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் மருத்துவர்கள் இந்த மருத்துவ நிலையத்தில் பணியாற்றுவதாக, இந்திய மருத்துவர் காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உலகெங்கும் உள்ள மருத்துவ நிபுணர்களை இஸ்லாமிய அமைப்புடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளை, குறிப்பிட்ட இந்திய மருத்துவர் தென்மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று இந்திய புலனாய்வு அமைப்புகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

7 கருத்துரைகள்:

No body will work with terrorist. .. This fake message seems to create problem for peaceful srilankan Muslims.

It is not proper for Jaffnamuslim.com to write this kind of message which can harm srilankan muslims.

We are to follow the guidance of Allah through prophet Muhammed (sal) and not any terrorist groups.

May Allah save our brothers and sisters.

இலங்கையிலுள்ள எந்த வைத்தியரும் இவ்வாறு is இல் இணையவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் உள்ளூரிலேயே வசதிவாய்ப்பாகவும் கௌரவமாகவும் வாழ்கிறார்கள்.
இங்கு ஊகிக்கப்படுகிற வைத்தியர் அமெரிக்க இஸ்ரேலிய தயாரிப்பாகவும் விபச்சார மீடியாக்களின் விநியோகமாகவும் இருக்கலாம்.
இலங்கையர் எவரும் is இல் இல்லை என்பதை பாதுகாப்புத்துறை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இது இந்திய காவி அரசு தனது தேவைக்காக இலங்கைக்கு பூச்சாண்டிகாட்டுவதற்கு எடுக்கும் பரப்புரையாகவே இருக்கும்.

Trace the news

Released by Indian media/ Intelligence, circulated by Colombo Gassette - The actors here are right wing Indian media and their local agent Colombo gezzette, Rutnam knows the credibility of the news piece still he published this fake news hence revealed his true identity


The scenario here is, already ISIS has been defeated, few days before they lost the last stronghold hence they are virtually non existent in ground hence there is no fully fledged Madical facility to manage or operate, articles main theme was claiming a such facility ... .... we can go on ... proving the fallacy .. what is disheartening is Colombo gezette owned by Tamils publishing this crap

@Lafir, இலங்லையில் ISIS ஆழமாக வேறுன்றிவருவது என்பது துரதிஸ்டவசமான உண்மை தான்.
ஏற்கனவே, CIA, RAW ஆகியன அரசுக்கு இதை உறுதிபடுத்துத்தி விட்டன.

இதை வெளியில் அறிவித்து, இலங்கையில் மேலும் இனபிரச்சனைகளை உருவாகஈமல், இலங்கை அரசு நிலமையை தற்போது கண்காணித்து வருகிறது.

உன்னைப் போன்ற கபோதிகள் இலங்கையில் இருப்பதுதான் மிகவும் பெரிய துரதிர்ஷ்டம்.

உமது புலனாய்வுத்திறன் 2009இல் தோல்வியடைந்துவிட்டதை நாங்கள் மீண்டும் உமக்கு ஞாபகமூட்ட வேண்டிய அவசியமில்லாத நிலையில் உமது மூளையிலுள்ள சிறு சிறு முடிச்சுக்களை வெள்ளம் அடித்துச்சென்று மணல் வார்த்துவிட்டதா?

Mr.அந்தோணி உங்களை நீண்ட நாட்களாக நானும் அவதானித்து கொண்டுதான் இருக்கின்றேன் உங்கள் கருத்து சொந்த கருத்தா அல்லது எங்காவது திருடப்பட்டு எவனாலும் புனையப்பட்ட் ஒன்றை நீங்கள் பதிவு இடுகின்ரீர்களா என்று எனக்கு தெரியாது மேலும் இஸ்லாத்துக்கு எதிராகவும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அநியாயத்தையும் அட்டுளியதையும் செய்ய சியோனிச மற்றும் யூத நாஸ்திகள் முயன்று கொண்டு அதில் ஒரு அங்கம் தான் இந்த ISIS என்ற அமைப்பு என்பதை உங்களுக்கு சொல்ல விரும்புகின்றேன். இன்னும் இதுபோல் நிறைய விளக்கங்கள் உங்களுக்கு சொன்னாலும் நீங்கள் புரிந்து கொள்கின்ற உள பக்குவம் உங்களிடம் இருக்குமா என்று என்னால் சொல்ல முடியாது. CIA மற்றும் RAW என்ற அமைப்பு எங்கே இலங்கையில் உள்ள அமைப்புக்களா மற்றும் இதுபற்றி அரசுக்கு அவர்கள் உறுதி படுத்திய எதாவது ஆதார பூரவ அறிக்கை உங்களிடம் உண்டா இருப்பின் கட்டாயம் இங்கே பதிவு இடவும் அது இல்லாமல் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று வாய்சாடல் வேண்டாம்.என்னால உங்களுக்கு கடந்த கால நிகழ்கால நிகழ்வுகளை எது வேண்டுமானாலும் தகுந்த அதரங்களுடன் சந்திக்க முடியும் என்பதையும் சொல்லிக்கொள்வதுடன் பொய் மற்றும் உகங்களை பதிவு இடுவதை நிறுத்தி கொள்ளவும் என்று வேண்டுகிறேன்.

Post a Comment